Monday, 7 December 2015

Ram

டாஸ்மாக் மூடக்கோரி ட்விட்டரில் போராட்டம் !!



  கடந்த 1மாதகாலமாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் கடலூர் இன்னும் சில இடங்களில் மழை நம்ம வாட்டி வதைக்கிறது. போதும் போதும் சொல்லும் அளவிற்கு மழை கொட்டித்தீர்தது இன்னுமும் மழை இருப்பதாக வானிலை ஆய்வுமையம் சொல்கிறது.

சென்னை கடலூர் மக்களுக்கு நடிகர் சித்தார்த் RJ பாலாஜி உதவி வருகிறார்கள் என்பது நாம் அறிந்ததே அதுவும் இல்லாமல் இளைஞ்சர்கள் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் பொது மக்களும் தங்களால் முடிந்த உதவி செய்து வருகிறார்கள்.

CloseTasmacDuringReliefWork
CloseTasmacDuringReliefWork

இதற்கிடையில் பொது மக்கள் எடுத்து வரும் நிவாரண பொருள்களை ADMK தொண்டர்கள் பிடுங்கி அதில் அம்மா ஸ்டிக்கர் ஓட்டுகிறார்கள் என்று ஒரு புறம் செய்திகள் வந்துகொண்டு உள்ளன. மக்கள் இவ்வளவு கஷ்ட்டப்பட்டு உதவும் நேரத்தில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் திறந்தே இருக்கிறது மழை வெள்ளம் இதை பொருட்படுத்தாமல் நம் குடிமகன்கள் நன்றாக குடித்துக்கொண்டு தான் இருகிறார்கள்.

இதை பார்த்து கடுப்பான ட்விட்டர் வாசிகள் டாஸ்மாக் மூடக்கோரி


இதற்க்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பாப்ர்ப்போம்.


Read More

Monday, 16 September 2013

Ram

ஆச்ச‌ரியப்பட வைத்த ஐஸ்வர்யா தனுஷ்

படத்தின் மூலம் இயக்குனராக முத்திரை பதித்த ஐஸ்வர்யா தனுஷ் தனது இரண்டாவது படம் வை ராஜா வை-யை சமீபத்தில் தொடங்கினார். தொடங்கிய முதல்நாளே ஐஸ்வர்யா தனுஷ் அனைவரையும் ஆச்ச‌ரியப்படுத்தினார். காரணம் அவ‌ரின் காஸ்டிங்.

பலபேர் அழைத்தும் நடிக்காத இயக்குனர் வஸந்தை வை ராஜா வை-யில் ஐஸ்வர்யா நடிக்க வைத்துள்ளார். முதல்நாள் படப்பிடிப்பில் வஸந்தும் கலந்து கொண்டார். அதேபோல் முன்னாள் நடிகை காயத்‌ரி ரகுராமும் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

நடிகையாக ப‌ரிணமிக்க முடியாமல் சில படங்களுடன் திருமணமாகி அமெ‌ரிக்காவில் செட்டிலானவர் காயத்‌ரி ரகுராம். திருமண வாழ்க்கை பாதியில் முறிய விவாகரத்து வாங்கி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்தமுறை நடன மாஸ்டராக. பல முன்னணி படங்களுக்கு இவர்தான் நடன மாஸ்டர். இனி நடிப்பதில்லை என்ற முடிவுடன் நடனத்தில் மூழ்கிப் போனவரை மீண்டும் கேமராமுன் நிறுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா.

வை ராஜா வை-யில் ஹீரோ கௌதம் கார்த்திக்கின் சகோத‌ரியாக நடிக்கிறார் காயத்‌ரி ரகுராம்.

ஒரு திறமையான நடிகையை மீண்டும் நடிக்க வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. சாதனைதான்.

Read More
Ram

காக்கிச் சட்டையில் காஜல் அகர்வால்

விஜய்யின் jiல்லா படத்தில் காஜல் அகர்வால் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் அவருக்கு சண்டைக் காட்சிகளும் இருக்கிறதாம்.


தலைவா படத்தின் நாயகி அமலா பாலும் போலீஸ் அதிகாரியாகதான் நடித்திருந்தார்.

போலீஸ் உடை அவருக்கு கம்பீரமாக இருந்ததைவிட காமெடியாக இருந்ததாகவே ரசிகர்கள் கருதினர். இந்நிலையில் ஜில்லா ஹீரோயினும் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.


ஜில்லாவை நேசன் இயக்க விஜய், மோகன்லால், பூர்ணிமா, பரோட்டா சூரி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசை. தயாரிப்பு ஆர்.பி.சௌத்hp. மோகன்லாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தென்தமிழகத்தில் அவரை வைத்து எடுப்பதாக இருந்த காட்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. அதற்குப் பதில் மோகன் ஸ்டுடியோவில் போடப்பட்ட அரங்கில் விஜய்யின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

ஜில்லா 2014 பொங்கல் வெளியீடாக வரவிருக்கிறது.

Read More
Sudharsan SR

அஜித், எனக்கு முத்த‍ம் கொடுத்து, எனது காதலை ஏற்க மறுத்தார் ! – நடிகை அதிரடி

 
sa     காதல் படத்தில் சந்தியாவிற்கு தோழி யாக நடித்தவர் தான் இந்த சரண்யா, பின் தாயிடம் கோபித்துக்கொண்டே சில காலம் தலை மறைவாக வாழ்ந்த வர். அதன்பின் ஒரு விளம்பரத்தில் அரை நிர்வாணமாக நடித்து கடுமை யாக விமர்சனங்களுக்கு ஆளானவர்.
தற்போது சரண்யா நாக் நான்கு தமிழ்த்திரைப்படங்களில் கதாநாய கியாக நடித்து வருகிறார். இவரிடம் சில செய்தியாளர்கள் கேட்ட‍ சில கேள்விகளுக்கு இவர் அளித்த பதில் எனக்கு முன் மாதிரி யார் என்றால் அது தனுஷ் தான். அவர், கவர்ச்சியாகவோ அல்ல‍து கம்பீ ரமாகவோ இல்லாவிட் டாலும் அவரின் அபாரமான வளர்ச்சி என் னை மிகவும் இம்பிரஸ் செய்துவிட்டது.
எனக்கு அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடி க்க ஆசையாக இருக்கிறது. மேலும் அஜி த்தை நேருக்கு நேராக பார்து தன்னை திருமணம் செய்து கொள்ளு மாறு வற்புறுத்தியிருக்கிறேன் என்ற ஒரு குண்டையும் தூக்கி போட்டிருக்கிறார்.
அதாவது அஜித், பார்த்திபன், தேவயானி நடித்த நீ வருவாய் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திர மாக சரண்யா நாக் நடித்த‍போது அஜித்தை பார்த்து, நான் வளர்ந்து பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும் என்று விளையாட்டுத் தனமாக வற்புறுத்தியதாக கூறியுள்ளாராம் சரண்யா நாக். இதைக்கேட்ட‍ அஜித், சிரித்துக்கொண்டே நீ முதலி ல் வளர்ந்து பெரியவளாக வா அப்புறம் பார்க்க‍லாம் என்று வேடிக்கையாக சொல்லி கன்ன‍த்தில் முத்திமிட்டு சென்றா ராம்.

Read More
Ram

பரத் திருமண வரவேற்பு... கருணாநிதி, குஷ்பு நேரில் வாழ்த்து

சென்னை: நடிகர் பரத் தனது மனைவி டாக்டர் ஜெஸ்லியை திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்தி ஆசிர்வதித்தார். முன்னதாக தனது திருமண வரவேற்புக்கான அழைப்பையும் கருணாநிதியை நேரில் சந்தித்துக் கொடுத்திருந்தார் பரத். இதையடுத்து நேற்று நடந்த திருமண வரவேற்பில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார். மேலும் திரையுலகினரும் திரண்டு வந்து பரத் தம்பதியை வாழ்த்தினர்
பரதத்துக்கும் துபாயில் வசித்து வரும் டாக்டர் ஜெஸ்லிக்கும் காதல் மலர்ந்தது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இது காதல் மணம் மட்டுமல்லாமல், கலப்பு மணமும் என்பதால் பதிவுத் திருமணம் நடத்த முடிவானது. அதன்படி, ஆகஸ்ட் 9ம் தேதி ஹோட்டல் ஒன்றில் எளிமையான முறையில் திருமணும், திருமணப் பதிவும் நடந்தது.

நேற்று இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது.

பரத் தம்பதியை திமுக தலைவர் கருணாநிதி நேரில் வந்து வாழ்த்தினார். மேலும் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் வாழ்த்தினர்.

அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நேரில் வந்து வாழ்த்தினார்.

நடிகர்கள் அர்ஜூன், பார்த்திபன், சூர்யா, சத்யராஜ், மோகன், விமல், அருண் விஜய், செந்தில், விவேக், இயக்குநர்கள் டி.ராஜேந்தர், பாக்யராஜ் உள்ளிட்டோரும் நேரில் வாழ்த்தினர்
.

நடிகை குஷ்புவும் நேரில் வந்து பரத் தம்பதியை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.
.


Read More

Sunday, 15 September 2013

Sudharsan SR

ரசிகர்களின் சிறிய ஏமாற்றம் - ஆரம்பம்

 

     ரம்பம் படத்தின் பாடல்கள் செப்டம்பர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.

விஷ்ணுவர்தன் இயக்கும் இந்த படத்தில் அஜித், ஆரியா, நயன்தாரா, தப்சி என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

இப்படத்தில் 5 பாடல்கள் உள்ளன என்று தகவல் வெளியானது. ஆரம்பம் படத்தில் தீம் மியூசிக் இல்லாதது அஜித் ரசிகர்களுக்கிடையே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்க்கு முன் அஜித் - யுவன்  கூட்டணியில் வந்த பில்லா, மங்காத்தா மற்றும் பில்லா 2 படத்தின் தீம் மியூசிக் பெரும் வரவேற்ப்பை பெற்றதால் இப்படத்தின் தீம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் ஒரு பாடலும் பாடவில்லை.

இருப்பினும் ஆரம்பம் படத்தில் யுவனின் பின்னணி இசை, ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.



Read More
Ram

நடிகர் விஷால் மாதிரி மாப்பிள்ளை வேணும்... சீரியல் நடிகை காவ்யா வர்ஷினி

தென்றல் தொடரில் அப்பாவி மருமகளாய் நடித்து இல்லத்தரசிகளின் உள்ளங்களில் குடியேறியவர் காவ்யா வர்ஷினி. திருமதி செல்வம், செல்லமே, பார்த்த ஞாபகம் இல்லையோ, என பிரபல தொடர்களில் நடித்து பிரபல சீரியல் நடிகையாக உயர்ந்துள்ளார். சன் டிவியில் சின்னச்சந்திப்பு நிகழ்ச்சியில் சமீபத்தில் பேட்டியளித்த காவ்யா வர்ஷினி தனக்கு விஷால் போல மாப்பிள்ளை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.


தென்றல் தொடரில் கல்யாணியாக நடித்த சூசனுக்கு பதில் நடிக்கிறார் காவ்யா. திடீரென்று கேட்டதால் ஏற்கனவே திருமதி செல்வம் தொடரில் குமரன் இயக்கத்தில் நடித்த அனுபவம் இருந்த காரணத்தால் நடிக்க ஒத்துக் கொண்டாராம்.

போலீஸ் அதிகாரியாக நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை எனவே கார்த்திகைப் பெண்கள் தொடரில் அந்த வாய்ப்பு கிடைத்த உடன் ஈசியாக நடித்தாராம். பைத்தியம் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது இவரது ஆசையாம். அதுவும் இலக்கணம் மாறுதோ தொடரில் நிறைவேறி விட்டதில் செம குஷியில் இருக்கிறார்.

இதுவரை யாரையும் காதலித்ததில்லை என்கிறார் காவ்யா. வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக்கிட்டு இருக்காங்க. ஆனால் எனக்குன்னு ஒருத்தரைப் பார்த்து பொறுமையாகக் காதலித்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார். நல்ல உயரமா கொஞ்சம் மாநிறமா இருந்தா போதும், பார்க்கிறதுக்கு விஷால் மாதிரி இருக்கணும் என்றார் காவ்யா.  

நடிப்பில் தனக்கு சிம்ரன்தான் ரோல்மாடல் என்று கூறிய காவ்யா தனக்கு சின்னத்திரையில் ராகவி, ரிந்தியா, நீபா இன்னும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்றார்.

காவ்யாவின் எனிடைம் பேவரைட் உணவு பிரியாணியாம். எப்போ பிரியாணி கொடுத்தாலும் சாப்பிடுவேன் என்றார்.

சின்னத்திரையில் நடிப்பதே போதும் அதுவே திருப்தியாக இருக்கிறது. பெரிய திரை வேண்டவே வேண்டாம் என்றும் கூறியுள்ளார்
.


Read More
Ram

கோடிகளில் புழங்கும் விஜய் படங்களின் வியாபாரம்! அடுத்த சூப்பர் ஸ்டாரா?

சென்னை: விஜய் படங்களின் வியாபாரம் கோடிகளில் நடந்து வருகிறது. அப்படி என்றால் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவாரா? கோலிவுட் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக குட்டீஸ்களின் மனம் கவர்ந்த நாயகன் யார் என்றால் அது விஜய் தான். நண்டு, சுண்டுகளும், கல்லூரி மாணவ, மாணவிகளும் விஜய்யை தங்கள் சொந்த அண்ணனாகவே நினைக்கின்றனர். நடுவில் சில காலம் விஜய்யின் படங்கள் அவரது ரசிகர்களே பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. இதையடுத்து நண்பன் படத்தில் இருந்து விஜய்க்கு நல்ல காலம் மீண்டும் துவங்கியது. அவரது படங்களின் சாட்டிலைட் உரிமங்கள் மட்டும் பல கோடிக்கு போய்க் கொண்டிருக்கிறது.





ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ. 12 கோடிக்கு போனது. இதே போல துப்பாக்கி படத்தின் சாட்டிலைட் உரிமமும் பல கோடிக்கு போனது. மேலும் இந்த இரண்டு படங்களுமே வசூலை அள்ளிக் குவித்தன.

தலைவா படத்திற்கு பிரச்சனை வந்ததும் வந்தது படத்தின் எதிர்பார்ப்பு கண்டமேனிக்கு எகிறிவிட்டது. இதையடுத்து தலைவா படம் மட்டும் ஓடவில்லை அதன் சாட்டிலை உரிமம் கூட ரூ.15 கோடிக்கு போனது. வாங்கியது வேறு யாருமில்லை சன் டிவி தான்.

நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் ஜில்லா படத்தின் சாட்டிலை உரிமம் ரூ.18 கோடிக்கு போயுள்ளது. இது தவிர விஜய்யின் சம்பளமும் ரூ.15 கோடி ஆகியுள்ளது.

விஜய்யின் படங்கள் தொடர்ந்து கல்லா கட்டி வருகின்றன. அவரது படத்தின் சாட்டிலைட் உரிமங்களும் பிற நடிகர்களின் படங்களை விட அதிக விலைக்கு போகிறது. அப்படி என்றால் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா?




Read More