ஆரம்பம் படத்தின் பாடல்கள் செப்டம்பர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.
விஷ்ணுவர்தன் இயக்கும் இந்த படத்தில் அஜித், ஆரியா, நயன்தாரா, தப்சி என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
இப்படத்தில் 5 பாடல்கள் உள்ளன என்று தகவல் வெளியானது. ஆரம்பம் படத்தில் தீம் மியூசிக் இல்லாதது அஜித் ரசிகர்களுக்கிடையே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்க்கு முன் அஜித் - யுவன் கூட்டணியில் வந்த பில்லா, மங்காத்தா மற்றும் பில்லா 2 படத்தின் தீம் மியூசிக் பெரும் வரவேற்ப்பை பெற்றதால் இப்படத்தின் தீம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் ஒரு பாடலும் பாடவில்லை.
இருப்பினும் ஆரம்பம் படத்தில் யுவனின் பின்னணி இசை, ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.