விஜய்யின் jiல்லா படத்தில் காஜல் அகர்வால் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் அவருக்கு சண்டைக் காட்சிகளும் இருக்கிறதாம்.
தலைவா படத்தின் நாயகி அமலா பாலும் போலீஸ் அதிகாரியாகதான் நடித்திருந்தார்.
போலீஸ் உடை அவருக்கு கம்பீரமாக இருந்ததைவிட காமெடியாக இருந்ததாகவே ரசிகர்கள் கருதினர். இந்நிலையில் ஜில்லா ஹீரோயினும் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
ஜில்லாவை நேசன் இயக்க விஜய், மோகன்லால், பூர்ணிமா, பரோட்டா சூரி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசை. தயாரிப்பு ஆர்.பி.சௌத்hp. மோகன்லாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தென்தமிழகத்தில் அவரை வைத்து எடுப்பதாக இருந்த காட்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. அதற்குப் பதில் மோகன் ஸ்டுடியோவில் போடப்பட்ட அரங்கில் விஜய்யின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
ஜில்லா 2014 பொங்கல் வெளியீடாக வரவிருக்கிறது.
ஜில்லா 2014 பொங்கல் வெளியீடாக வரவிருக்கிறது.