Monday, 16 September 2013

Ram

பரத் திருமண வரவேற்பு... கருணாநிதி, குஷ்பு நேரில் வாழ்த்து

சென்னை: நடிகர் பரத் தனது மனைவி டாக்டர் ஜெஸ்லியை திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்தி ஆசிர்வதித்தார். முன்னதாக தனது திருமண வரவேற்புக்கான அழைப்பையும் கருணாநிதியை நேரில் சந்தித்துக் கொடுத்திருந்தார் பரத். இதையடுத்து நேற்று நடந்த திருமண வரவேற்பில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார். மேலும் திரையுலகினரும் திரண்டு வந்து பரத் தம்பதியை வாழ்த்தினர்
பரதத்துக்கும் துபாயில் வசித்து வரும் டாக்டர் ஜெஸ்லிக்கும் காதல் மலர்ந்தது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இது காதல் மணம் மட்டுமல்லாமல், கலப்பு மணமும் என்பதால் பதிவுத் திருமணம் நடத்த முடிவானது. அதன்படி, ஆகஸ்ட் 9ம் தேதி ஹோட்டல் ஒன்றில் எளிமையான முறையில் திருமணும், திருமணப் பதிவும் நடந்தது.

நேற்று இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது.

பரத் தம்பதியை திமுக தலைவர் கருணாநிதி நேரில் வந்து வாழ்த்தினார். மேலும் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் வாழ்த்தினர்.

அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நேரில் வந்து வாழ்த்தினார்.

நடிகர்கள் அர்ஜூன், பார்த்திபன், சூர்யா, சத்யராஜ், மோகன், விமல், அருண் விஜய், செந்தில், விவேக், இயக்குநர்கள் டி.ராஜேந்தர், பாக்யராஜ் உள்ளிட்டோரும் நேரில் வாழ்த்தினர்
.

நடிகை குஷ்புவும் நேரில் வந்து பரத் தம்பதியை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.
.