Monday, 16 September 2013

Ram

ஆச்ச‌ரியப்பட வைத்த ஐஸ்வர்யா தனுஷ்

படத்தின் மூலம் இயக்குனராக முத்திரை பதித்த ஐஸ்வர்யா தனுஷ் தனது இரண்டாவது படம் வை ராஜா வை-யை சமீபத்தில் தொடங்கினார். தொடங்கிய முதல்நாளே ஐஸ்வர்யா தனுஷ் அனைவரையும் ஆச்ச‌ரியப்படுத்தினார். காரணம் அவ‌ரின் காஸ்டிங்.

பலபேர் அழைத்தும் நடிக்காத இயக்குனர் வஸந்தை வை ராஜா வை-யில் ஐஸ்வர்யா நடிக்க வைத்துள்ளார். முதல்நாள் படப்பிடிப்பில் வஸந்தும் கலந்து கொண்டார். அதேபோல் முன்னாள் நடிகை காயத்‌ரி ரகுராமும் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

நடிகையாக ப‌ரிணமிக்க முடியாமல் சில படங்களுடன் திருமணமாகி அமெ‌ரிக்காவில் செட்டிலானவர் காயத்‌ரி ரகுராம். திருமண வாழ்க்கை பாதியில் முறிய விவாகரத்து வாங்கி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்தமுறை நடன மாஸ்டராக. பல முன்னணி படங்களுக்கு இவர்தான் நடன மாஸ்டர். இனி நடிப்பதில்லை என்ற முடிவுடன் நடனத்தில் மூழ்கிப் போனவரை மீண்டும் கேமராமுன் நிறுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா.

வை ராஜா வை-யில் ஹீரோ கௌதம் கார்த்திக்கின் சகோத‌ரியாக நடிக்கிறார் காயத்‌ரி ரகுராம்.

ஒரு திறமையான நடிகையை மீண்டும் நடிக்க வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. சாதனைதான்.