Monday, 27 September 2010
மட்டமான படங்களில் நடிச்சு ஏமாத்த விரும்பல : அஜித்
Sudharsan SR
11:58:00
மட்டமான படங்களில் நடிப்பதற்கு பதில் சும்மா வீட்ல உட்கார்ந்து விடலாம் என்று நடிகர் அஜித் ஆக்ரோஷமாக பேட்டியளித்துள்ளார். கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித் அளித்துள்ள பேட்டியில், படங்கள் ஓடாததால் ரேஸில் கவனம் செலுத்துகிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அதில், நான் இதுவரை நடிச்ச எல்லா படங்களிலும் என்னோட 100 சதவிகித உழைப்பை கொடுத்துத்தான் நடிச்சிருக்கேன். ஆனா, அதில் பல படங்கள் ஹிட் ஆகலைன்னு நினைக்கும்போது மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. தொடர்ந்து மட்டமான, குப்பையான படங்களா நடிச்சு என் ரசிகர்களை நான் ஏமாத்த விரும்பலை. அதுவும் இப்போ தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கிறது பெரிய செலவு பிடிக்கிற விஷயம். அவ்வளவு காசு செலவழிச்சு தியேட்டருக்கு வர்ற ரசிகர்கள் யாரும் நிச்சயம் குப்பையான படங்கள் பார்க்க விரும்பமாட்டாங்க. என்னைப் பொறுத்தவரை, மட்டமான படங்களில் நடிக்கிறதுக்கு பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். என்னால் தொடர்ந்து வருஷத்துக்கு 200 நாள் கால்ஷீட் கொடுத்து கோடி கோடியா சம்பாதிக்க முடியும். ஆனால், எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த அஜீத் மனசுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்வான். மனுஷனுக்கு சந்தோஷம்தான் சார் முக்கியம் என்று கூறியுள்ளார்.
அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், இப்போ நான் அரசியல்வாதி இல்லைன்னு யார் சொன்னது? இப்பவும் எப்பவும் அரசியல் என்னை சுத்தி இருந்துட்டேதான் இருக்கு. சினிமா இண்டஸ்ட்ரி முழுக்கவே பாலிடிக்ஸ்தான். கருணையே இல்லாத அந்த இண்டஸ்ட்ரியில் ஒருத்தன் வாழணும்னா, அவனுக்கு நிச்சயம் அரசியல் தெரிஞ்சிருக்கணும். சினிமாவில் எந்த காட்ஃபாதரும் இல்லாம 18 வருஷம் சமாளிச்சு நிக்க, சாதிக்க, நானும் எப்பவோ அரசியல்ல இறங்கிட்டேன். ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்னு எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கு. அரசியல் இல்லாத ஒரு இடம்கூட இந்த உலகத்தில் இல்லை. அரசியல் இல்லாத மனுஷன் யாரும் இந்த உலகத்தில்
Post a Comment