அமீர்கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற “3 இடியட்ஸ்” படம் தமிழில் ரீமேக் ஆவது 100% சதவிகிதம் உறுதியாகியிருக்கிறது. ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் பட நிறுவனம் சார்பில் டெல்லியில் உள்ள டெக்ராடன்னில் டிசம்பர் 7 முதல் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவன வட்டாரம் உறுதிசெய்கிறது. இந்தப் படத்தில் அமீர் கான் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க, ஷங்கர் இயக்குகிறார்.
மாதவன் கதாபாத்திரத்தில் ஜீவாவும், சல்மான் ஜோஷி கதாபாத்திரத்தில் ஸ்ரீ காந்த்தும் தேர்வு செய்யப்படுள்ளனர். முன்றாவது இடியட் விஷயத்தில் இழுபறி இருந்துவந்த நிலையில் ஸ்ரீகாந்த் எந்த ஊதியமும் வாங்காமல் இதில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் நியாயமான சம்பளத்தை அவருக்குத் தர ஒப்புகொண்டுள்ளதாம்.