தென்றல் தொடரில் அப்பாவி மருமகளாய் நடித்து இல்லத்தரசிகளின் உள்ளங்களில் குடியேறியவர் காவ்யா வர்ஷினி. திருமதி செல்வம், செல்லமே, பார்த்த ஞாபகம் இல்லையோ, என பிரபல தொடர்களில் நடித்து பிரபல சீரியல் நடிகையாக உயர்ந்துள்ளார். சன் டிவியில் சின்னச்சந்திப்பு நிகழ்ச்சியில் சமீபத்தில் பேட்டியளித்த காவ்யா வர்ஷினி தனக்கு விஷால் போல மாப்பிள்ளை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
தென்றல் தொடரில் கல்யாணியாக நடித்த சூசனுக்கு பதில் நடிக்கிறார் காவ்யா. திடீரென்று கேட்டதால் ஏற்கனவே திருமதி செல்வம் தொடரில் குமரன் இயக்கத்தில் நடித்த அனுபவம் இருந்த காரணத்தால் நடிக்க ஒத்துக் கொண்டாராம்.
போலீஸ் அதிகாரியாக நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை எனவே கார்த்திகைப் பெண்கள் தொடரில் அந்த வாய்ப்பு கிடைத்த உடன் ஈசியாக நடித்தாராம். பைத்தியம் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது இவரது ஆசையாம். அதுவும் இலக்கணம் மாறுதோ தொடரில் நிறைவேறி விட்டதில் செம குஷியில் இருக்கிறார்.
இதுவரை யாரையும் காதலித்ததில்லை என்கிறார் காவ்யா. வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக்கிட்டு இருக்காங்க. ஆனால் எனக்குன்னு ஒருத்தரைப் பார்த்து பொறுமையாகக் காதலித்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார். நல்ல உயரமா கொஞ்சம் மாநிறமா இருந்தா போதும், பார்க்கிறதுக்கு விஷால் மாதிரி இருக்கணும் என்றார் காவ்யா.
நடிப்பில் தனக்கு சிம்ரன்தான் ரோல்மாடல் என்று கூறிய காவ்யா தனக்கு சின்னத்திரையில் ராகவி, ரிந்தியா, நீபா இன்னும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்றார்.
காவ்யாவின் எனிடைம் பேவரைட் உணவு பிரியாணியாம். எப்போ பிரியாணி கொடுத்தாலும் சாப்பிடுவேன் என்றார்.
சின்னத்திரையில் நடிப்பதே போதும் அதுவே திருப்தியாக இருக்கிறது. பெரிய திரை வேண்டவே வேண்டாம் என்றும் கூறியுள்ளார்
.