Sunday, 15 September 2013

Ram

கோடிகளில் புழங்கும் விஜய் படங்களின் வியாபாரம்! அடுத்த சூப்பர் ஸ்டாரா?

சென்னை: விஜய் படங்களின் வியாபாரம் கோடிகளில் நடந்து வருகிறது. அப்படி என்றால் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவாரா? கோலிவுட் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக குட்டீஸ்களின் மனம் கவர்ந்த நாயகன் யார் என்றால் அது விஜய் தான். நண்டு, சுண்டுகளும், கல்லூரி மாணவ, மாணவிகளும் விஜய்யை தங்கள் சொந்த அண்ணனாகவே நினைக்கின்றனர். நடுவில் சில காலம் விஜய்யின் படங்கள் அவரது ரசிகர்களே பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. இதையடுத்து நண்பன் படத்தில் இருந்து விஜய்க்கு நல்ல காலம் மீண்டும் துவங்கியது. அவரது படங்களின் சாட்டிலைட் உரிமங்கள் மட்டும் பல கோடிக்கு போய்க் கொண்டிருக்கிறது.





ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ. 12 கோடிக்கு போனது. இதே போல துப்பாக்கி படத்தின் சாட்டிலைட் உரிமமும் பல கோடிக்கு போனது. மேலும் இந்த இரண்டு படங்களுமே வசூலை அள்ளிக் குவித்தன.

தலைவா படத்திற்கு பிரச்சனை வந்ததும் வந்தது படத்தின் எதிர்பார்ப்பு கண்டமேனிக்கு எகிறிவிட்டது. இதையடுத்து தலைவா படம் மட்டும் ஓடவில்லை அதன் சாட்டிலை உரிமம் கூட ரூ.15 கோடிக்கு போனது. வாங்கியது வேறு யாருமில்லை சன் டிவி தான்.

நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் ஜில்லா படத்தின் சாட்டிலை உரிமம் ரூ.18 கோடிக்கு போயுள்ளது. இது தவிர விஜய்யின் சம்பளமும் ரூ.15 கோடி ஆகியுள்ளது.

விஜய்யின் படங்கள் தொடர்ந்து கல்லா கட்டி வருகின்றன. அவரது படத்தின் சாட்டிலைட் உரிமங்களும் பிற நடிகர்களின் படங்களை விட அதிக விலைக்கு போகிறது. அப்படி என்றால் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா?