Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, 7 December 2015

Ram

டாஸ்மாக் மூடக்கோரி ட்விட்டரில் போராட்டம் !!



  கடந்த 1மாதகாலமாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் கடலூர் இன்னும் சில இடங்களில் மழை நம்ம வாட்டி வதைக்கிறது. போதும் போதும் சொல்லும் அளவிற்கு மழை கொட்டித்தீர்தது இன்னுமும் மழை இருப்பதாக வானிலை ஆய்வுமையம் சொல்கிறது.

சென்னை கடலூர் மக்களுக்கு நடிகர் சித்தார்த் RJ பாலாஜி உதவி வருகிறார்கள் என்பது நாம் அறிந்ததே அதுவும் இல்லாமல் இளைஞ்சர்கள் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் பொது மக்களும் தங்களால் முடிந்த உதவி செய்து வருகிறார்கள்.

CloseTasmacDuringReliefWork
CloseTasmacDuringReliefWork

இதற்கிடையில் பொது மக்கள் எடுத்து வரும் நிவாரண பொருள்களை ADMK தொண்டர்கள் பிடுங்கி அதில் அம்மா ஸ்டிக்கர் ஓட்டுகிறார்கள் என்று ஒரு புறம் செய்திகள் வந்துகொண்டு உள்ளன. மக்கள் இவ்வளவு கஷ்ட்டப்பட்டு உதவும் நேரத்தில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் திறந்தே இருக்கிறது மழை வெள்ளம் இதை பொருட்படுத்தாமல் நம் குடிமகன்கள் நன்றாக குடித்துக்கொண்டு தான் இருகிறார்கள்.

இதை பார்த்து கடுப்பான ட்விட்டர் வாசிகள் டாஸ்மாக் மூடக்கோரி


இதற்க்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பாப்ர்ப்போம்.


Read More

Saturday, 14 September 2013

Ram

சினிமா நூற்றாண்டு விழா: கருணாநிதி, விஜயகாந்துக்கு அழைப்பு இல்லை

இந்திய சினிமாவுக்கு இது நூறாவது ஆண்டு. இதனை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சென்னையில் பிரமாண்டமாக கொண்டாட இருக்கிறது. வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவுக்கு வேண்டிய ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. தமிழக முதல்வர் உள்ளிட்ட தென்மாநில முதல்வர்கள், இந்திய ஜனாதிபதி, தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள், இந்தி சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் விழாக்கள் பற்றிய விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவை தனது வசனங்கள் மூலம் அடுத்த தளத்திற்கு எடுத்து வந்ததோடு 50 படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதி 70 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் கருணாநிதிக்கு அழைப்பு அனுப்படவில்லை என்கிறார்கள். அதோடு 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர், தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்து அதன் கடனை தீர்த்தவர் விஜயகாந்த். அவருக்கும் அழைப்பு அனுப்பவில்லை. இருவரும் அரசியல் கட்சிகளின் தலைவராக இருப்பதால் அவர்களை அழைப்பதில் சில தர்மசங்கடங்கள் இருக்கிறது என்று விழா தரப்பினர் காரணம் சொல்கிறார்களாம். அப்படியென்றால் விழாவை முன்னின்று நடத்துபவர்களில் ஒருவரான சரத்குமாரும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்தானே என்று சில நடிகர்கள் தங்கள் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
Read More

Tuesday, 29 March 2011

Sudharsan SR

சட்டசபை தேர்தல் - அஜித்தின் பங்கு

 

           ட்டசபை தேர்தலில் அஜித்தின் பங்கு ஓட்டு போடுவது மட்டும்தானாம். ஒருபுறம் வாய்ப்பில்லாத நட்சத்திரங்களையெல்லாம் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு வளைத்துக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் நடிகர்கள் வடிவேலு போன்ற  காமெடி நடிகர்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகின்றன அரசியல் கட்சிகள். குஷ்பு, நெப்போலியன் போன்றவர்களும் தேர்தல் பிரசாரத்தில் சுறுசுறுப்பாக சுழன்று கொண்டிருக்கிறார்கள். நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து, அவரது ரசிகர்களை பிரசார களத்தில் குதிக்க வைத்திருக்கிறது.

இப்படி நட்சத்திர பட்டாளங்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ள நிலையில் நடிகர் அஜித் யாருக்காவது ஆதரவு தெரிவிப்பாரா? என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் வழக்கம்போலவே அஜித் இந்த தேர்தலிலும் எந்தவிதமான வாய்சும் கொடுக்கப் போவதில்லை. அவர் தற்போது மங்காத்தா சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். தேர்தலுக்கு முந்தைய தினம் வரை மும்பையில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், தேர்தல் தினத்தில் சென்னை வந்து ஜனநாயக கடமையான ஓட்டு போடுவதை முடித்துக் கொண்டு, மீண்டும் மும்பையில் இருக்கும் மங்காத்தா குழுவுடன் இணைந்து கொள்ளப் போகிறார். இதுதான் தேர்தலில் அஜித்தின் ‌பங்காக இருக்கும் அஜித் வட்டார தகவல்கள். 

Read More

Tuesday, 25 January 2011

Sudharsan SR

அஜித் விஜய் சந்திப்புகள்

 


                    ரு ராட்சத கழுகு போல வடிவமைப்புள்ள Oddy , BMW என்று விதவிதமான கார்களில் வந்திறங்குவார் விஜய். இந்த ஆடம்பரங்களுக்கு கூட இப்போது ஓய்வு கொடுத்துவிட்டார் அவர். இந்த திடீர் எளிமைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் கருப்பு நிற ஸ்விப்ட்டில்தான் வெளியே வருகிறார். அஜீத்தை அடிக்கடி சந்திப்பதும் இந்த எளிமைக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இவர்கள் சந்திப்பில் அரசியல், சினிமா இரண்டு விஷயங்களும் இருக்குமாம்.

சமீபத்தில் காவலனுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் ரொம்ப அக்கறையாக விசாரித்திருக்கிறார் அஜீத். இந்த குழப்பங்களை ஒட்டி தனக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களையும் மீண்டும் நினைவு படுத்தி விஜய்யிடம் பகிர்ந்து கொண்டாராம் அஜீத்.

Read More

Friday, 21 January 2011

Sudharsan SR

விஜய்க்கு எதிரான சதி

 

         துவரை எத்தனையோ படங்களுக்கு சி்க்கல்கள் வந்திருக்கிறது; ஆனால் காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் பிரச்னைகள் புதிய அனுபவமாக இருக்கிறது. அந்த பிரச்னைகளுக்கு காரணம் யார்? அது எங்கிருந்து வருகிறது? யார் தூண்டி விடுகிறார்கள்? எதனால் நெருக்கடி கொடுத்தார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். 


விஜய் நடித்த காவலன் படம் பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் ரிலீசானது. படம் பரவலான வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் விஜய் நடித்த படங்களில் இது பரவாயில்லை என்று இது விமர்சனங்களில் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தப் படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. படத்தின் பேனர்கள் அகற்றப்படுவதாக ரசிகர்கள் புகார்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனக்கு எதிராக மிகப் பெரிய சதி நடந்து வருவதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளார். 
விஜய் கூறியுள்ளதாவது:
எனது திரையுலக வாழ்க்கையில் இத்தனை பெரிய பிரச்சினைகளைச் சந்தித்த பிறகு ஒரு படம் ரிலீஸாவது இதுவே முதல்முறை. பொதுவா ஒரு படம் ரிலீஸாகும்போது சில பிரச்சினைகள் வருவது சகஜம்தான். பின்னர் அவை தீர்க்கப்பட்டுவிடும். ஆனால் காவலன் விஷயத்தில், பிரச்சினை தீரக்கூடாது என முடிவு செய்து பலர் வேலை செய்தனர்.
இந்த சதியில் பல விரும்பத்தகாத விஷ சக்திகளின் கை இருப்பது எனக்கும் தெரியும். அவர்கள் யார் என்பதும் தெரியும். ஆனால் இவர்களை எனது ரசிகர்களின் துணையுடன் நான் எதிர்கொள்வேன். "காவலன் எனக்கு ஒரு புதிய அனுபவம்தான்,” என்றார் விஜய்.

Read More

Wednesday, 29 December 2010

Sudharsan SR

அரசியலே வேணாம் நண்பா || அஜித்தின் அட்வைஸ்

 
”உங்களோட அரசியல் பிரவேசம் வெற்றி பெற வாழ்த்துகள். சக நடிகனா நான் உங்களுக்கு இதச்சொல்றேன். அதே சமயம், உங்களோட நண்பனா நான் சொல்லணும்னா… உங்களோட அரசியல் ஆர்வம் உங்களோட மனநிம்மதியை கெடுக்குதுன்னா… அப்படிப்பட்ட அரசியலே வேணாம் நண்பா…’’


சமீபத்தில ஏவி.எம்.ஸ்டுடியோவில் இருந்த விஜய்யை சந்தித்து அஜீத் சொன்ன அட்வைஸ் அது.
ராகுல் காந்தியை விஜய் சந்தித்ததிலிருந்தே அதிகாரம் படைத்தவர்களின் பலமுனை நெருக்கடிக்கு ஆளானார் விஜய். அதனால்தான் தனது ரசிகர் மன்றத்தினரை அழைத்து அரசியல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவந்தார் விஜய். அதனால் நெருக்கடிகள் தொடர்ந்தது. அந்த நெருக்கடிகளின் தொடர்ச்சிதான் விஜய்யின் “காவலன்’ வெளிவர முடியாத அளவிற்கு…. தியேட்டர்கள் கிடைக்காத அளவுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள். ஷங்கர் படத்தில் நடிக்க முடியாத சூழல்.

இனி பிரச்சினைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டவுடன்தான் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஜெவுடனான சந்திப்பிற்குப் பிறகு தியேட்டர் அதிபர்கள் விஜய்க்கு கொடுத்து வந்த நெருக்கடிகள் ஓரளவுக்கு குறைந்து ‘”காவலன்’ படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.
பொங்கலுக்குப் பிறகு… திருச்சியில் விஜய் மக்கள் இயக்க மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டுக்கு முன்பாக இயக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தவிருக்கிறார் விஜய். அந்த கூட்டத்தில் ஏழை மக்களுக்கு என்னென்ன மாதிரி யான நலத்திட்ட உதவிகளைச் செய்யலாம்? தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக எப்படிப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொள்வது? என்பது குறித்தும் முடிவெடுக்கவிருக்கிறார்கள். ஏற்கனவெ ஈரோட்டில் நடக்கவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை போலீஸார் தகுந்த பாதுகாப்பு தராததால் அதைவிட பிரமாண்டமாக அதே ஈரோட்டில் இந்த மாநாட்டை நடத்தலாம் என்கிற கருத்தும் விஜய் வட்டாரங்களில் நிலவிவருகிறது. நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல… வெளி நாட்டிலிருந்து திரும்பியிருக்கும் விஜய் வெகு விரைவில் ஜெயலலிதாவை சந்திக்கவிருக்கிறார். ஜெயலலிதா விரும்பும் பட்சத் தில்… விஜயகாந்த்திடமும் பேசி அவரை அ.தி.மு.க. கூட்டணிக்கு கொண்டுவரும் வேலையைச் செய்ய எஸ்.ஏ.சந்திரசேகர் தயாராக இருக்கிறார். இப்படி நேரடியாக தி.மு.க.விற்கு எதிராக விஜய் களமிறங்கியதோடு சினிமா மூலமும் தன் எதிர்ப்பை காட்டவிருக்கிறார்.
சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் ‘”பகல வன்’. இந்தப் படத்தில் தி.மு.க. விற்கு எதிரான விஷயங்களை பஞ்ச் டயலாக்காக பேச விருக் கிறார். சீமானும் காங்கிரஸுக்கு எதிரான முழக்கங்களை படத்தில் சேர்க்கிறார். ஆக அனல் அடிக் கும் கதை, தங்களின் கோபத் தை காட்டும் கதை என்ப தால் படத்திற்கு ‘”கோபம்’ என பெயர் சூட்ட லாமா? எனவும் ஆலோசித்து வருகிறார் சீமான். காங்கிரஸ் நிற்கும் இடங்களில் எல்லாம் நாம் தமிழர் இயக்கம் காங்கிரஸை தோற் கடிக்க கடுமையாக பிரச்சாரம் நடத்தும் என சீமான் அறிவித்திருப்ப தால், அ.தி.மு.க. பிரமுகர்கள் குஷியாக சீமானிடம் பேசிவருகிறார்கள். “அண்ணே… உங்களுக்கு ஆதரவா எதையும் செய்வோம்’ எனச் சொல்லி வருகிறார்கள்.
இப்படி சினிமாக்காரர்களின் அரசியல் அதிரடி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்…
“என்னை அரசியலுக்கு வா என தொல்லை கொடுத் தால் ரசிகர்மன்றத்தையே கலைத்து விடுவேன்’ என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார் அஜீத்.
இந்த அறிக்கையின் பின்னணி குறித்து விசாரித்தோம்.
“”ஜெயலலிதாவின் அன்பிற்குரியவராக அஜீத் இருந்தாலும் அவர் அரசியலில் ஆர்வம் காட்டாமலேயே இருக்கிறார். ஆனால் விஜய் ரசிகர்கள் அரசியல் களத்தில் இறங்கப்போவதால் “நம்ம தலயும் அரசியலில் இறங்கணும்’ என அஜீத்தை நச்சரிக்     கிறார்கள்.
அஜீத் படப்பிடிப்பிற்காக செல்லும் இடங்களில் எல்லாம் அவரின் ரசிகர்கள் கூடி “அரசியலுக்கு வரணும்’ என ஆர்ப்பாட்டம், கோஷம் என அமளி பண்ணுவதோடு ரகசிய ஆலோசனை கூட்டமும் நடத்தி வருகிறார்கள். இதனால் அவ்வப்போது ரசிகர் மன்றத்தினரை கூப்பிட்டு அஜீத் கடிந்துகொள்வது வழக்கம்.
ஆனால் கடந்த வாரம் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்ட அஜீத் ரசிகர் மன்றத்தினரில் ஒருபிரிவினர் பல்லாவரத்தில் ரகசிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டத்தில் அரசிய லுக்கு அஜீத் வரணும் என தீர்மானம் நிறைவேற்றத் தயாரானார்கள். இது அஜீத்தை டென்ஷனாக்கிவிட்டது. ‘”எனது கொள்கைக்கு மாறாக எனது ரசிகர் மன்றத்தினர் செயல்பட ஆரம்பித்தால் உடனடியாக அஜீத் ரசிகர் மன்றத்தை கலைத்துவிடுவேன்’ என அறிக்கைவிட்டு எச்சரித்தார் அஜீத். இதையடுத்து “அந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டு ‘உங்கள் எண்ணப்படி செயல்படுவோம். மன்றங்களை கலைக்காதீர்கள்’ என அஜீத்திற்கு உறுதியளித்திருக்கிறார்கள்.
“மன நிம்மதியை அரசியல் கெடுக்குமானால் அப்படிப்பட்ட அரசியல் எதுக்கு உங்களுக்கு?’ என விஜய்க்கு ஆலோசனை சொன்ன அஜீத் அரசியலில் எப்படி ஈடுபடுவார்?” என்கிறார்கள் தலைமை மன்ற பிரமுகர்கள்.
தல தள்ளி நிற்கிறார். தளபதி துள்ளி வருகிறார்.
Read More