இதுவரை எத்தனையோ படங்களுக்கு சி்க்கல்கள் வந்திருக்கிறது; ஆனால் காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் பிரச்னைகள் புதிய அனுபவமாக இருக்கிறது. அந்த பிரச்னைகளுக்கு காரணம் யார்? அது எங்கிருந்து வருகிறது? யார் தூண்டி விடுகிறார்கள்? எதனால் நெருக்கடி கொடுத்தார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
விஜய் நடித்த காவலன் படம் பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் ரிலீசானது. படம் பரவலான வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் விஜய் நடித்த படங்களில் இது பரவாயில்லை என்று இது விமர்சனங்களில் கூறப்பட்டு வருகிறது.
விஜய் நடித்த காவலன் படம் பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் ரிலீசானது. படம் பரவலான வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் விஜய் நடித்த படங்களில் இது பரவாயில்லை என்று இது விமர்சனங்களில் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தப் படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. படத்தின் பேனர்கள் அகற்றப்படுவதாக ரசிகர்கள் புகார்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனக்கு எதிராக மிகப் பெரிய சதி நடந்து வருவதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
விஜய் கூறியுள்ளதாவது:
எனது திரையுலக வாழ்க்கையில் இத்தனை பெரிய பிரச்சினைகளைச் சந்தித்த பிறகு ஒரு படம் ரிலீஸாவது இதுவே முதல்முறை. பொதுவா ஒரு படம் ரிலீஸாகும்போது சில பிரச்சினைகள் வருவது சகஜம்தான். பின்னர் அவை தீர்க்கப்பட்டுவிடும். ஆனால் காவலன் விஷயத்தில், பிரச்சினை தீரக்கூடாது என முடிவு செய்து பலர் வேலை செய்தனர்.
இந்த சதியில் பல விரும்பத்தகாத விஷ சக்திகளின் கை இருப்பது எனக்கும் தெரியும். அவர்கள் யார் என்பதும் தெரியும். ஆனால் இவர்களை எனது ரசிகர்களின் துணையுடன் நான் எதிர்கொள்வேன். "காவலன் எனக்கு ஒரு புதிய அனுபவம்தான்,” என்றார் விஜய்.