சட்டசபை தேர்தலில் அஜித்தின் பங்கு ஓட்டு போடுவது மட்டும்தானாம். ஒருபுறம் வாய்ப்பில்லாத நட்சத்திரங்களையெல்லாம் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு வளைத்துக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் நடிகர்கள் வடிவேலு போன்ற காமெடி நடிகர்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகின்றன அரசியல் கட்சிகள். குஷ்பு, நெப்போலியன் போன்றவர்களும் தேர்தல் பிரசாரத்தில் சுறுசுறுப்பாக சுழன்று கொண்டிருக்கிறார்கள். நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து, அவரது ரசிகர்களை பிரசார களத்தில் குதிக்க வைத்திருக்கிறது.
இப்படி நட்சத்திர பட்டாளங்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ள நிலையில் நடிகர் அஜித் யாருக்காவது ஆதரவு தெரிவிப்பாரா? என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் வழக்கம்போலவே அஜித் இந்த தேர்தலிலும் எந்தவிதமான வாய்சும் கொடுக்கப் போவதில்லை. அவர் தற்போது மங்காத்தா சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். தேர்தலுக்கு முந்தைய தினம் வரை மும்பையில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், தேர்தல் தினத்தில் சென்னை வந்து ஜனநாயக கடமையான ஓட்டு போடுவதை முடித்துக் கொண்டு, மீண்டும் மும்பையில் இருக்கும் மங்காத்தா குழுவுடன் இணைந்து கொள்ளப் போகிறார். இதுதான் தேர்தலில் அஜித்தின் பங்காக இருக்கும் அஜித் வட்டார தகவல்கள்.