ஒரு ராட்சத கழுகு போல வடிவமைப்புள்ள Oddy , BMW என்று விதவிதமான கார்களில் வந்திறங்குவார் விஜய். இந்த ஆடம்பரங்களுக்கு கூட இப்போது ஓய்வு கொடுத்துவிட்டார் அவர். இந்த திடீர் எளிமைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
இப்போதெல்லாம் கருப்பு நிற ஸ்விப்ட்டில்தான் வெளியே வருகிறார். அஜீத்தை அடிக்கடி சந்திப்பதும் இந்த எளிமைக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இவர்கள் சந்திப்பில் அரசியல், சினிமா இரண்டு விஷயங்களும் இருக்குமாம்.
சமீபத்தில் காவலனுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் ரொம்ப அக்கறையாக விசாரித்திருக்கிறார் அஜீத். இந்த குழப்பங்களை ஒட்டி தனக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களையும் மீண்டும் நினைவு படுத்தி விஜய்யிடம் பகிர்ந்து கொண்டாராம் அஜீத்.