Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Wednesday, 16 December 2015

Ram

ரஜினி படத்தில் விஜய்யா !!

Vijay In Rajini Movie    


மீபகாலமாக இந்த வாட்சப் ட்விட்டர் பேஸ்புக்களில் இஷ்டத்திற்கு இதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற சுதந்திரம் கிடைக்கிறது. இதை பயன் படுத்திக்கொண்டு சிலர் தான் வாய்க்கு வருவதை எல்லாம் உண்மை என்று சொல்லி பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

இதே போல் தான் ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றி அடைந்த மன்னன் படத்தில் விஜய் நடிப்பதாகவும் அதை KS ரவிக்குமார் இயக்குவதாக பொய்யான செய்திகள் இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதை விஜய் தரப்பிடம் விசாரித்த பொழுது விஜய்60 மட்டும் தான் இப்பொழுது உறுத்தி செய்யப்பட்டுள்ளது புரளிகளை நம்ப வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
ரஜினி படத்தில் விஜய்யா !!
ரஜினி படத்தில் விஜய்யா !!
இது போல பொய்யான செய்திகள் பரப்புவதினால் என்ன கிடக்கிறது என்று தெரியவில்லை இது போன்ற செய்திகளை முற்றிலும்
தவிர்க்கும்மாறு  ரசிகர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
Read More

Monday, 27 December 2010

Sudharsan SR

கல்லூரி பாடத்தில் ரஜினியின் முத்து படம்

 




கல்லூரி பாடத்தில் ரஜினிகாந்த் நடித்த முத்து படம் இடம்பெற்றுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது முத்து படம். இந்தப் படம் ஜப்பானில் டேன்சிங் மகாராஜா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.

இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் உருவாயினர். அதில் ஒருவரான ஜப்பான் ரசிகை ஒருவர், ரஜினியின் பாபா படத்தில் அவருடன் இணைந்து நடித்தார்.

இந்த நிலையில் அகமதாபாத் வணிக கல்லூரி ஒன்றின் பாடப்புத்தகத்தில் ரஜினியின் முத்து படம் இடம் பெற்றுள்ளது. 

ஜப்பானில் சிறப்பாக ஓடி வெற்றி பெற்றதையடுத்து முத்து படம் சிறந்த வணிக சினிமா என்ற பெயர் பெற்றுள்ளது. ரஜினியின் மற்ற படங்களுக்கு இல்லாத சிறப்பு இந்த படத்துக்கு எவ்வாறு கிடைத்தது என்ற கேள்விக்குறி கல்வி நிபுணர்களை சிந்திக்க வைத்தது.
 
இது குறித்து ஆராய்ச்சி செய்யும் முகமாக அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் பாடப் புத்தகத்தில் முத்து படத்தை சேர்த்துள்ளனர். இது இந்தியாவின் பிரபலமான வணிக கல்லூரியாகும்.
Read More

Sunday, 26 December 2010

Sudharsan SR

கமலுக்கு ஏன் இத்தனை கோபம்?

 



       'வாலி 80' கொண்டாட்டம். காவியக் கவிஞராக விளங்கும் வாலியின் 80வது பிறந்தநாள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. தமிழ் திரையின் துருவ நட்சத்திரங்களான ரஜினி, கமல் இந்த விழாவில் பங்கேற்றனர். விழாவில் வாலி எழுதிய பாடல்களில் 1000 பாடல்களை தேர்வு செய்து அதை புத்தகமாக வெளியிட்டனர். இந்த 'வாலி 1000' புத்தகத்தை கமலஹாசன் வெளியிட அதை இயக்குனர் ஷங்கர் பெற்றுக்கொண்டார். இதில் கவிபேரரசு வைரமுத்துவும் கலந்து கொண்டார் என்பது இன்னொரு சிறப்பு. கமல் புகைப்பட நிருபர்களிடம் ஏதோ ஒரு கோபத்துடனே இருந்தார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. கமல் காரில் இருந்து இறங்கியவுடன் பளீர் என வெளிச்சம் அவர் முகத்தில் பட்டது. அது வீடியோ காமிராவின் ஸ்பாட் லைட். சட சடவென ஸ்டில் கேமராக்களின் ப்ளாஷ். வெளிச்சம் தன் மீது படுவதை விரும்பாத கமல் கையை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டார். லைட்டை அணைக்க சொல்லி கோபத்துடன் கை அசைத்தார். ஆனால் பளீர் வெளிச்சம் படர்ந்தபடியே இருந்தது. 'லைட்டை ஆப் பண்ணுங்கப்பா...' என்று அங்கிருந்தவர்கள் கூச்சல் போட... லைட் அணையவில்லை.


               லைட்டை நிறுத்தினால் தான் இந்த இடத்தை விட்டு நகர்வேன் என கமல் கோபத்துடனே தன் கையை அசைத்தபடி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக லைட் அணைக்கப்பட்டது. கமலும் விழா அரங்கிற்குள் சென்றார். 'பளிர்னு லைட் பட்டதினாலே கோபப் பட்டுட்டாரு போலப்பா! என்று புகைப்பட நிருபர்கள் பேசிக் கொண்டார்கள்.


              விழா அரங்கில் 'வாலி 1000' புத்தகம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. கமல் எழுந்தார், மேடையில் இருக்கும் அனைவரும் எழுந்தார்கள். மீண்டும் புகைப்பட நிருபர்கள் க்ளோசப்பில் போட்டோ கிடைக்கும் என்று கமலை மேடைக்கு முன்பாக அழைத்தார்கள். 'ஏன் இங்கே நின்னா எடுக்கமுடியாதா?' என கேட்டார் கமல். கமலை வாலி முன்னுக்கு அழைத்தார். அதை மறுத்த கமல், 'இல்லைப் பரவாயில்லை...' என்று கையசைத்தப்படியே சொன்னார். புத்தகம் வெளியிடப்பட்டது. ஏன் நம்ம மேல இவ்வளவு கடுப்பா இருக்காரு என்று புகைப்படக் நிருபர்கள் பேசிக் கொள்ள... அருகில் அமர்ந்திருந்த சூர்யாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் கமல். வாலியைப் பற்றி மேடையில் இருந்தவர்கள் பாராட்டிப் பேசினார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாலி எழுதி அவர் பாடிய பாடல்களை மேடையில் பாடிக் கொண்டிருந்தார். பாடல்களுக்கு மெய்மறந்து கைத்தட்டிக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். திடீரென விண்ணைப் பிளக்கும் அளவிற்கு கைத்தட்டல் சத்தம், மேடையில் ரஜினி! ரசிகர்களுக்கு வணக்கம் வைக்கிறார். (எப்போ வருவாரு எப்படி வருவாரு என யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவாரு... உண்மைதான்). இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.


           ரஜினியுடன் வைரமுத்துவும் வந்திருந்தார். இன்னும் ஆச்சர்யம்! வாலி பாராட்டு விழாவில் வைரமுத்துவா? ரஜினி பேசும் போது வாலியைப் பாராட்டி பேசியதோடு அவர் மீது எனக்கு ஒரு கோபம் என்று குண்டைத் தூக்கிபோட்டார்! எல்லோரும் புருவம் நிமிர்த்த... என் மகள் திருமணத்திற்கு நான் நேரில் சென்று வாலி சாருக்கு பத்திரிகை வைத்தேன். ஆனால் அவர் திருமணத்திற்கு வரவில்லை. அதனால் இந்த விழாவுக்கு வரமாட்டேன் என்று நான் மறுத்துவிட்டேன். வைரமுத்து தான் என்னை அழைத்து வந்தார் என்றார் ரஜினி. மேலும் 'நாம நண்பர்கள் மாதிரிதானே பழகுறோம்... இல்லையா என்னால வரமுடியாது என்று என்னிடம் நேராக சொல்லியிருக்கலாமே. அது பற்றி அவர் மீது எனக்கு ரொம்பவும் கோபம். இன்று வரை அவரிடம் நான் பேசவே இல்லை' என்று உரிமையாக தன் கோபத்தை வெளிப்படுத்தினார் ரஜினி. வாலி பேசும் போது, நேரில் வந்து பத்திரிகை வைத்தும் நான் திருமணத்திற்கு வரவில்லை என்று ரஜினி ஏன் மீது கோபப்படுகிறார். நான் அப்படி ஒன்றும் நாகரீகம் அற்றவன் அல்ல, அன்று தான் என் மனைவியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது என்று பதிலளித்தார். என்னைக் கோபக்காரன் என்று ரஜினி என்னிடம் ஒருமுறை சொன்னார் என்ற நிகழ்வை சொன்ன வாலி... கோபப்படாமல் இருக்க நான் என்ன மண்புழுவா? மரவட்டையா? மனுஷன்யா என்று ஜாலியாக ஒரு பஞ்ச் வைத்தார். ரஜினி தன் கோபத்தை வெளிப்படையாக மைக் முன்பு பேசிவிட்டார். கமல் ஒரு விளங்க முடியா கவிதை!

Read More

Saturday, 25 December 2010

Sudharsan SR

சந்திரமுகி-2 || ரஜினி நடிக்க மறுப்பு

 
        
      சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை கன்னடத்தில் ரிலீஸ் செய்து வெற்றி பெற்ற இயக்குநர் வாசு, அதை தமிழில் ரஜினியை வைத்து இயக்க விரும்பினார்.

  ஆனால் அப்போது, முதலில் இதை தெலுங்கு இயக்குங்கள், பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டாராம்.
அதன்படி வெங்கடேஷ் – அனுஷ்காவை வைத்து தெலுங்கில் நாகவள்ளி் எனும் பெயரில் எடுத்து வெளியிட்டுள்ளார் வாசு. இந்தப் படத்தை சில தினங்களுக்கு முன் பார்த்து இயக்குநர் வாசுவைப் பாராட்டினார் ரஜினி.
ஆனால் தமிழில் தான் நடித்தால் சரியாக வராது என்று கூறிய அவர், அஜீத்தை வைத்து எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளார். தேவைப்பட்டால் ஓரிரு காட்சிகளில் நடித்ததுத் தருவதாகவும் ரஜினி கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

இப்போது அஜீத்தை அணுகியுள்ளார் இயக்குநர் வாசு.

Read More

Thursday, 23 December 2010

Sudharsan SR

கமலை வாழ்த்திய ரஜினி !

 
மன்மதன் அம்புவின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் கமல். தான் திரைக்கதை எழுதி நடித்து இன்று வெளியாகி உள்ள மன்மதன் அம்பு படத்தை நேற்று தன் சினிமா உலகின் நெருங்கிய நண்பர் ரஜினிக்கு போட்டுக் காண்பித்தார் கமல். படம் பார்க்க ரஜினி தன் குடும்பத்துடன் வந்தார். கமலும் குடும்பத்தோடு வந்திருந்தார்.  கமலின் மற்ற சினிமா நண்பர்களும் இந்தச் சிறப்பு காட்சியில் கலந்து கொண்டனர்.


தன் திரைக்கதையில் உருவான தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன் படங்களுக்கும் இப்படி ஒரு சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்திருந்தார் கமல். அதிலும் திரையுலக நண்பர்கள், இளம் இயக்குனர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் இதை ஒரு ஆரோக்கியமான விஷயமாகவே கருதுகிறார் கமல்.



காமெடி கலந்த கதையில் நடிப்பது என்பது கமலுக்கு ஒன்றும் புதிதில்லை. அதுவும் இவரோடு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்துவிட்டால், சொல்லவே வேண்டாம். இவர்கள் காம்பினேஷனில் மீண்டும் வெளிவந்திருக்கிறது மன்மதன் அம்பு. இது ஒரு வியாபார சினிமா என்று கமலே சொல்லிவிட்டார். அதனால் படத்தில் ஆட்டம் பாட்டம் அதிகமாம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் 'டண்டணக்கா' இசையை கேட்கும் போதே, இதை பல பேர் உணர்ந்திருப்பார்கள். விடுமுறை நாட்களை என்ஜாய் பண்ண சரியான படம் என்றும் மன்மதன் அம்பு படம் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்.

படத்தில் சூர்யா ஒரு பாடலுக்கு வருகிறார் என்பது படத்தின் இன்னொரு ஹைலைட். படத்துக்கு முக்கியமாக உதவி இருப்பது வசனங்கள் தானாம். அப்படி கிச்சு கிச்சு மூட்டி சிரிப்பை வரவழைக்கிறதாம் வசனங்கள். அதை விட, படத்துக்கு சிறப்பாக உதவியது ஷூட்டிங் செல்வதற்கு முன்பு படத்தில் நடிப்பவர்கள் ஒத்திகை பார்த்ததுதான் என, படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.


சரி படம் பார்த்து ரஜினி என்ன சொன்னார்?... படத்தை பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரித்த ரஜினி. படம் பார்த்து முடிந்து வெளியே வந்தவுடன் கமலைத் கட்டி அனைத்து வாழ்த்தினார். குடும்பத்தோட பார்த்து சிரித்தோம். நல்ல படம் என்று கமலிடம் சொன்னார் ரஜினி.

சிரிக்க மட்டும் இல்லைங்க, சிந்திக்கவும் நிறைய விஷயங்களை படத்தில் வைத்திருக்கிறாராம் கமல்.
Read More
Sudharsan SR

ர‌ஜினியின் அடுத்த புதிய படம் ஹரா.

 
ர‌ஜினி பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கயிருக்கிறார் என்றெல்லாம் யூகத் தகவல்கள் கோடம்பாக்கத்தை வலம் வருகிறது. ஆனால் இதுவரை அவர் புதிய படம் எதிலும் கமிட்டாகவில்லை என்பதும், ஹரா முடிந்த பிறகே அடுத்தப்படம் குறித்து யோசிக்க இருக்கிறார் என்பதுமே உண்மை.

ச‌ரி, அது என்ன ஹரா?

சௌந்தர்யா ர‌ஜினியால் தொடங்கப்பட்ட அனிமேஷன் படமான சுல்தான் தி வா‌ரியர் படத்தின் புதிய பெயர்தான் ஹரா.

இந்தப் படத்தின் தயா‌ரிப்பில் பங்குபெற்ற நிறுவனங்களுக்கு உ‌ரிய பணம் கொடுத்து செட்டில் செய்துள்ளார் செள‌ந்த‌ர்யா. அவரது ஆக்கர் ஸ்டுடியோ தயா‌ரிப்பு பொறுப்பை முழுமையாக ஏற்றுள்ளது.

அனிமேஷன் ர‌ஜினி ஒருவேளை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனால் என்ன செய்வது என்று ர‌ஜினியை வைத்து நேரடியாக சில காட்சிகளை எடுக்கவுள்ளனர். அதாவது பாதி அனிமேஷன் ர‌ஜினி, மீதி ஒ‌ரி‌ஜினல் ர‌ஜினி.

இந்த மாற்றங்கள் நிகழந்ததாலும், சுல்தான் தி வா‌ரியர் பழமையாகிப் போனதாலும் ஹரா என்ற புதிய பெயரை சூட்டியுள்ளனர்.
Read More