கல்லூரி பாடத்தில் ரஜினிகாந்த் நடித்த முத்து படம் இடம்பெற்றுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது முத்து படம். இந்தப் படம் ஜப்பானில் டேன்சிங் மகாராஜா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.
இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் உருவாயினர். அதில் ஒருவரான ஜப்பான் ரசிகை ஒருவர், ரஜினியின் பாபா படத்தில் அவருடன் இணைந்து நடித்தார்.
இந்த நிலையில் அகமதாபாத் வணிக கல்லூரி ஒன்றின் பாடப்புத்தகத்தில் ரஜினியின் முத்து படம் இடம் பெற்றுள்ளது.
ஜப்பானில் சிறப்பாக ஓடி வெற்றி பெற்றதையடுத்து முத்து படம் சிறந்த வணிக சினிமா என்ற பெயர் பெற்றுள்ளது. ரஜினியின் மற்ற படங்களுக்கு இல்லாத சிறப்பு இந்த படத்துக்கு எவ்வாறு கிடைத்தது என்ற கேள்விக்குறி கல்வி நிபுணர்களை சிந்திக்க வைத்தது.
இது குறித்து ஆராய்ச்சி செய்யும் முகமாக அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் பாடப் புத்தகத்தில் முத்து படத்தை சேர்த்துள்ளனர். இது இந்தியாவின் பிரபலமான வணிக கல்லூரியாகும்.