சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை கன்னடத்தில் ரிலீஸ் செய்து வெற்றி பெற்ற இயக்குநர் வாசு, அதை தமிழில் ரஜினியை வைத்து இயக்க விரும்பினார்.
ஆனால் அப்போது, முதலில் இதை தெலுங்கு இயக்குங்கள், பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டாராம்.
அதன்படி வெங்கடேஷ் – அனுஷ்காவை வைத்து தெலுங்கில் நாகவள்ளி் எனும் பெயரில் எடுத்து வெளியிட்டுள்ளார் வாசு. இந்தப் படத்தை சில தினங்களுக்கு முன் பார்த்து இயக்குநர் வாசுவைப் பாராட்டினார் ரஜினி.
ஆனால் தமிழில் தான் நடித்தால் சரியாக வராது என்று கூறிய அவர், அஜீத்தை வைத்து எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளார். தேவைப்பட்டால் ஓரிரு காட்சிகளில் நடித்ததுத் தருவதாகவும் ரஜினி கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்போது அஜீத்தை அணுகியுள்ளார் இயக்குநர் வாசு.