Showing posts with label போட்டி. Show all posts
Showing posts with label போட்டி. Show all posts

Friday, 21 January 2011

Sudharsan SR

விஜய்க்கு எதிரான சதி

 

         துவரை எத்தனையோ படங்களுக்கு சி்க்கல்கள் வந்திருக்கிறது; ஆனால் காவலனுக்கு கொடுக்கப்பட்டு வரும் பிரச்னைகள் புதிய அனுபவமாக இருக்கிறது. அந்த பிரச்னைகளுக்கு காரணம் யார்? அது எங்கிருந்து வருகிறது? யார் தூண்டி விடுகிறார்கள்? எதனால் நெருக்கடி கொடுத்தார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். 


விஜய் நடித்த காவலன் படம் பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் ரிலீசானது. படம் பரவலான வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் விஜய் நடித்த படங்களில் இது பரவாயில்லை என்று இது விமர்சனங்களில் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தப் படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. படத்தின் பேனர்கள் அகற்றப்படுவதாக ரசிகர்கள் புகார்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனக்கு எதிராக மிகப் பெரிய சதி நடந்து வருவதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளார். 
விஜய் கூறியுள்ளதாவது:
எனது திரையுலக வாழ்க்கையில் இத்தனை பெரிய பிரச்சினைகளைச் சந்தித்த பிறகு ஒரு படம் ரிலீஸாவது இதுவே முதல்முறை. பொதுவா ஒரு படம் ரிலீஸாகும்போது சில பிரச்சினைகள் வருவது சகஜம்தான். பின்னர் அவை தீர்க்கப்பட்டுவிடும். ஆனால் காவலன் விஷயத்தில், பிரச்சினை தீரக்கூடாது என முடிவு செய்து பலர் வேலை செய்தனர்.
இந்த சதியில் பல விரும்பத்தகாத விஷ சக்திகளின் கை இருப்பது எனக்கும் தெரியும். அவர்கள் யார் என்பதும் தெரியும். ஆனால் இவர்களை எனது ரசிகர்களின் துணையுடன் நான் எதிர்கொள்வேன். "காவலன் எனக்கு ஒரு புதிய அனுபவம்தான்,” என்றார் விஜய்.

Read More

Friday, 14 January 2011

Sudharsan SR

தொடரும் காவலன் பிரச்சனை !! ரிலீஸ் எப்போ?

 
பொங்கலுங்கு ரிலீசாகும் படங்களில் காவலன் படமும் ஒன்று, ஆனால் காவலன் படத்த்தை வெளியிட தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. டிசம்பர் மாதமே காவலன் பட வெளியாக இருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து காவலன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், ‘காவலன்’ படத்துக்கான நாளிதழ் விளம்பரங்களில் இடம்பெற்றிருந்த டைரக்டர் ஷக்தி சிதம்பரத்தின் பெயர் தற்போது நீக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க அந்த படத்துக்கான விநியோக உரிமையை விஜய்  பெற்றிருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அவரது பெயர் தற்போது நீக்கப்பட்டிருப்பதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.  இதுதவிர, ஷக்தி சிதம்பரம் திடீரென தலைமறைவாகி விட்டதாகவும் அவரை சிலர் கடத்திச் சென்று விட்டதாகவும் மாறி மாறி கோடம்பாக்க வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.



பிரச்சனைகள் அதிகரித்து வருவ‌தை பார்த்து கொதிப்படைந்த விஜய் நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார். இதுவெறும் படம் மட்டுமல்ல என்னுடைய பிரஸ்டீஜ் என்று ஓப்பனாக பேசிவிட்டார். எப்படியாவது படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே தீர வேண்டும் என்று அதிரடியாக கூறிவிட்டார். அதன் விளைவு, படத்தை அவரே நேரடியாக வெளியிட இருக்கிறார். ஷக்தி சிதம்பரத்திற்கு பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு அவரிடமிருந்து படத்தை வாங்கி விஜய்யும், பிரபல பைனான்ஸியர் ஒருவரும் சேர்ந்து வெளியிட இருக்கின்றனர் என்று கூறப் படுகிறது.


இதனையடுத்து காவலன் படம் இந்த பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. படத்தை இன்று வெளியிடாமல் நாளை (15ம் தேதி) வெளியிடுகின்றனர்.
Read More

Wednesday, 29 December 2010

Sudharsan SR

அரசியலே வேணாம் நண்பா || அஜித்தின் அட்வைஸ்

 
”உங்களோட அரசியல் பிரவேசம் வெற்றி பெற வாழ்த்துகள். சக நடிகனா நான் உங்களுக்கு இதச்சொல்றேன். அதே சமயம், உங்களோட நண்பனா நான் சொல்லணும்னா… உங்களோட அரசியல் ஆர்வம் உங்களோட மனநிம்மதியை கெடுக்குதுன்னா… அப்படிப்பட்ட அரசியலே வேணாம் நண்பா…’’


சமீபத்தில ஏவி.எம்.ஸ்டுடியோவில் இருந்த விஜய்யை சந்தித்து அஜீத் சொன்ன அட்வைஸ் அது.
ராகுல் காந்தியை விஜய் சந்தித்ததிலிருந்தே அதிகாரம் படைத்தவர்களின் பலமுனை நெருக்கடிக்கு ஆளானார் விஜய். அதனால்தான் தனது ரசிகர் மன்றத்தினரை அழைத்து அரசியல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவந்தார் விஜய். அதனால் நெருக்கடிகள் தொடர்ந்தது. அந்த நெருக்கடிகளின் தொடர்ச்சிதான் விஜய்யின் “காவலன்’ வெளிவர முடியாத அளவிற்கு…. தியேட்டர்கள் கிடைக்காத அளவுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள். ஷங்கர் படத்தில் நடிக்க முடியாத சூழல்.

இனி பிரச்சினைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டவுடன்தான் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஜெவுடனான சந்திப்பிற்குப் பிறகு தியேட்டர் அதிபர்கள் விஜய்க்கு கொடுத்து வந்த நெருக்கடிகள் ஓரளவுக்கு குறைந்து ‘”காவலன்’ படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.
பொங்கலுக்குப் பிறகு… திருச்சியில் விஜய் மக்கள் இயக்க மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டுக்கு முன்பாக இயக்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தவிருக்கிறார் விஜய். அந்த கூட்டத்தில் ஏழை மக்களுக்கு என்னென்ன மாதிரி யான நலத்திட்ட உதவிகளைச் செய்யலாம்? தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக எப்படிப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொள்வது? என்பது குறித்தும் முடிவெடுக்கவிருக்கிறார்கள். ஏற்கனவெ ஈரோட்டில் நடக்கவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை போலீஸார் தகுந்த பாதுகாப்பு தராததால் அதைவிட பிரமாண்டமாக அதே ஈரோட்டில் இந்த மாநாட்டை நடத்தலாம் என்கிற கருத்தும் விஜய் வட்டாரங்களில் நிலவிவருகிறது. நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல… வெளி நாட்டிலிருந்து திரும்பியிருக்கும் விஜய் வெகு விரைவில் ஜெயலலிதாவை சந்திக்கவிருக்கிறார். ஜெயலலிதா விரும்பும் பட்சத் தில்… விஜயகாந்த்திடமும் பேசி அவரை அ.தி.மு.க. கூட்டணிக்கு கொண்டுவரும் வேலையைச் செய்ய எஸ்.ஏ.சந்திரசேகர் தயாராக இருக்கிறார். இப்படி நேரடியாக தி.மு.க.விற்கு எதிராக விஜய் களமிறங்கியதோடு சினிமா மூலமும் தன் எதிர்ப்பை காட்டவிருக்கிறார்.
சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் ‘”பகல வன்’. இந்தப் படத்தில் தி.மு.க. விற்கு எதிரான விஷயங்களை பஞ்ச் டயலாக்காக பேச விருக் கிறார். சீமானும் காங்கிரஸுக்கு எதிரான முழக்கங்களை படத்தில் சேர்க்கிறார். ஆக அனல் அடிக் கும் கதை, தங்களின் கோபத் தை காட்டும் கதை என்ப தால் படத்திற்கு ‘”கோபம்’ என பெயர் சூட்ட லாமா? எனவும் ஆலோசித்து வருகிறார் சீமான். காங்கிரஸ் நிற்கும் இடங்களில் எல்லாம் நாம் தமிழர் இயக்கம் காங்கிரஸை தோற் கடிக்க கடுமையாக பிரச்சாரம் நடத்தும் என சீமான் அறிவித்திருப்ப தால், அ.தி.மு.க. பிரமுகர்கள் குஷியாக சீமானிடம் பேசிவருகிறார்கள். “அண்ணே… உங்களுக்கு ஆதரவா எதையும் செய்வோம்’ எனச் சொல்லி வருகிறார்கள்.
இப்படி சினிமாக்காரர்களின் அரசியல் அதிரடி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்…
“என்னை அரசியலுக்கு வா என தொல்லை கொடுத் தால் ரசிகர்மன்றத்தையே கலைத்து விடுவேன்’ என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார் அஜீத்.
இந்த அறிக்கையின் பின்னணி குறித்து விசாரித்தோம்.
“”ஜெயலலிதாவின் அன்பிற்குரியவராக அஜீத் இருந்தாலும் அவர் அரசியலில் ஆர்வம் காட்டாமலேயே இருக்கிறார். ஆனால் விஜய் ரசிகர்கள் அரசியல் களத்தில் இறங்கப்போவதால் “நம்ம தலயும் அரசியலில் இறங்கணும்’ என அஜீத்தை நச்சரிக்     கிறார்கள்.
அஜீத் படப்பிடிப்பிற்காக செல்லும் இடங்களில் எல்லாம் அவரின் ரசிகர்கள் கூடி “அரசியலுக்கு வரணும்’ என ஆர்ப்பாட்டம், கோஷம் என அமளி பண்ணுவதோடு ரகசிய ஆலோசனை கூட்டமும் நடத்தி வருகிறார்கள். இதனால் அவ்வப்போது ரசிகர் மன்றத்தினரை கூப்பிட்டு அஜீத் கடிந்துகொள்வது வழக்கம்.
ஆனால் கடந்த வாரம் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்ட அஜீத் ரசிகர் மன்றத்தினரில் ஒருபிரிவினர் பல்லாவரத்தில் ரகசிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டத்தில் அரசிய லுக்கு அஜீத் வரணும் என தீர்மானம் நிறைவேற்றத் தயாரானார்கள். இது அஜீத்தை டென்ஷனாக்கிவிட்டது. ‘”எனது கொள்கைக்கு மாறாக எனது ரசிகர் மன்றத்தினர் செயல்பட ஆரம்பித்தால் உடனடியாக அஜீத் ரசிகர் மன்றத்தை கலைத்துவிடுவேன்’ என அறிக்கைவிட்டு எச்சரித்தார் அஜீத். இதையடுத்து “அந்த கூட்டத்தை ரத்து செய்துவிட்டு ‘உங்கள் எண்ணப்படி செயல்படுவோம். மன்றங்களை கலைக்காதீர்கள்’ என அஜீத்திற்கு உறுதியளித்திருக்கிறார்கள்.
“மன நிம்மதியை அரசியல் கெடுக்குமானால் அப்படிப்பட்ட அரசியல் எதுக்கு உங்களுக்கு?’ என விஜய்க்கு ஆலோசனை சொன்ன அஜீத் அரசியலில் எப்படி ஈடுபடுவார்?” என்கிறார்கள் தலைமை மன்ற பிரமுகர்கள்.
தல தள்ளி நிற்கிறார். தளபதி துள்ளி வருகிறார்.
Read More
Sudharsan SR

திக்கி திணறும் காவலன் || தியேட்டருக்கு பஞ்சம்

 


பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர் கிடைப்பது சிரமம்-விஜய்க்கு பெரும் நெருக்கடி!
விஜய் நடிக்க வந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இத்தனை ஆண்டுகளில் அவர் சந்தித்திராத நெருக்கடியை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
அசினுடன் அவர் நடித்துள்ள காவலன் திரைப்படம், எல்லாம் முடிந்த பிறகும் கூட ரிலீசுக்கு வழியில்லாமல் தவிக்கிறது. இதுவரை மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்ட்டு, தியேட்டர்கள் கிடைக்காமல் தள்ளிப் போடப்பட்டது காவலன்.
கடைசியாக டிசம்பர் 17 என நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதிக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம் என்றும், அப்படியே கிடைத்தாலும் அடுத்த வாரம் மன்மதன் அம்பு வெளியாகும்போது தூக்கிவிட வேண்டும் என்றும் நிர்பந்திக்க டென்ஷனான விஜய், படத்தை பொங்கலுக்குத் தள்ளி வைத்து விட்டார்.
இப்போது பொங்கலுக்கும் கூட இந்தப்படத்துக்கு நல்ல தியேட்டர்கள் தரமுடியாது என்றும் ஏதாவது மூன்றாம் தர திரையரங்குகள்தான் கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏன்?

காரணம், பொங்கலுக்கு கருணாநிதியின் இளைஞன், சன் பிக்ஸர்ஸின் ஆடுகளம், க்ளவுட் நைன் புரொடக்ஷன்ஸின் சிறுத்தை ஆகிய படங்கள் வெளியாகின்றன. இளைஞன் படத்தை உதயநிதி ஸ்டாலின் அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார். முன்கூட்டியே தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து கையெழுத்தும் வாங்கிக் கொண்டுள்ளார்.
அடுத்து, ஆடுகளத்தை சன் பிக்ஸர்ஸ் ரிலீஸ் செய்கிறார்கள். விஜய் படம் தயாராகும் முன்பே ஆடுகளத்துக்காக தியேட்டர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
மூன்றாவது படமான சிறுத்தையை முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் வெளியிடுகிறது. இந்த நிறுவனமும் முன்கூட்டியே திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
மன்மதன் அம்பு உள்ளிட்ட மேற்கண்ட படங்களுக்காக நிறைய தியேட்டர்கள் புக் ஆகி விட்டதாக கூறப்பட்டாலும் கூட, காவலனுக்கு தியேட்டர் கிடைக்காமல் போயிருப்பதற்கு ‘உண்மை’யான காரணம் என்ன என்பது மற்றவர்களை விட திரையுலகினருக்கு மிக நன்றாகவேத் தெரியும். இருந்தாலும் வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு அவர்களை ஏதோ ஒரு ‘பாசவலை’ கட்டிப் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிங்கம் வேட்டையாடிய இறையின் மிச்சம் கிடப்பதைப் போல, இந்த மூன்று பெரிய நிறுவனங்களின் படங்களுக்கு ஒதுக்கப்பட்டது போக மீதியிருந்தால் அது காவலனுக்கு தரப்படும் என்கிறார்கள் எக்ஸிபிட்டர்ஸ் வட்டாரத்தில்.
“ஒருவேளை இப்போது, அதிக திரையரங்குகளில் ரிலீஸாகும் மன்மதன் அம்பு பொங்கல் நேரத்திலும் ஓடிக் கொண்டிருந்தால், காவலன் ரிலீஸ் பற்றி விஜய் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே…”, என்கிறார்கள்.
தன்னைச் சுற்றிலும் கணக்காக ‘ஆப்பு’ வைத்து விட்டார்கள் என்பதை உணர்ந்துள்ள விஜய், தற்போது அதிமுக ஆதரவுப் பிரமுகர்களிடம் உள்ள தியேட்டர்கள் குறித்துக் கணக்குப் போட்டுப் பார்த்துள்ளார். அது கிட்டத்தட்ட 120க்கும் அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கெல்லாம் காவலனை திரையிட அவர் முயற்சிகளை தொடங்கியுள்ளாராம்.

Read More

Monday, 27 December 2010

Sudharsan SR

த்ரிஷாவின் புத்தாண்டு சபதம்

 
நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டுக்கு புதிய சபதமொன்றை எடுத்திருக்கிறார். தெலுங்கு திரையுலகில் நடிகை இலியானாவுடன் நடந்த கவர்ச்சிப் போட்டியில் தோற்றுப்போய் நம்பர் 1 இடத்தை பறிகொடுத்த த்ரிஷா வரும் 2011ம் ஆண்டில் மீண்டும் நம்பர் 1 ஆக வேண்டும் என்று சபதமேற்றிருக்கிறாராம்.
மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்த குஷியில் இருக்கும் த்ரிஷா, வரும் புத்தாண்டு முதல் பல புதிய சபதங்களே ஏற்கவிருக்கிறார். அதில் ஒன்று தெலுங்கில் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிப்பது. தற்போது தெலுங்கில் இலியானா தான் முதலிடத்தில் உள்ளார். இதற்கு முன்பு த்ரிஷா தான் அந்த இடத்தில் இருந்தார். ஆனால் இலியானா தனது கவர்ச்சியால் த்ரிஷாவை ஓரம் கட்டி முதலிடத்திற்கு முன்னேறினார். இதனால் தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த த்ரிஷா, பின்னர் பாலிவுட்க்கு போனார். ஆனால் பாலிவுட் அவரை ஏமாற்றி விட்டது. இருந்தாலும் தமிழில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தமிழில் கமலுடன் இணைந்து நடித்த மன்மதன் அம்பு படம் த்ரிஷாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்திருப்பதால் ஏக குஷியில் இருக்கிறார் த்ரிஷா. இதனிடையே நடிகை இலியானா தமிழுக்கு வரஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார். இதனால் அந்த இடத்தை கப்பென்று பிடித்து மீண்டும் நம்பர் 1 இடத்தை தொட சபதமேற்றிருக்கிறாராம் த்ரிஷா.
Read More

Saturday, 25 December 2010

Sudharsan SR

மது விளம்பரம்: 20 கோடிக்கு மறுத்த சச்சின். || 25 கோடிக்கு சம்மதித்த தோனி.

 



ண்மையில் தன்னைத் தேடி வந்த ரூ 20 கோடி விளம்பர வாய்ப்பை நிராகரித்து விட்டார் சச்சின். காரணம், அது ஒரு மதுபான விளம்பரம். மது, சிகரெட் விளம்பரங்களில் ஒருபோதும் தான் நடிக்கமாட்டேன் என்று தன் தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்திருப்பதாகவும், இந்த சத்தியத்துக்காக மட்டுமின்றி,

இன்றைய இளைஞர்களை தவறான பாதையில் தனது விளம்பரங்கள் திருப்பி விடக் கூடாது என்பதற்காகவும் இந்த மாதிரி விளம்பரங்களில் ஒருபோதும் தோன்ற மாட்டேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.பணத்துக்காக எதையும் புரமோட் செய்யத் தயாராக இருக்கிறார்கள் இன்றைய பிரபலங்களில் பலர்.

ஆனால் சச்சின் தனது கொள்கையில் இத்தனை உறுதியாக இருப்பது பலரையும் மூக்கில் விரல் வைக்க வைத்துள்ளது.மதுவிளம்பரத்தை சச்சின் மறுத்தாலும், இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோணி ரூ 25 கோடி சம்பளத்தில் நடித்துத் தர ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

"இளைஞர்களுக்கு சச்சின் எப்படி ரோல்மாடலாகத் திகழ்கிறார்... பணம் என்பது அவருக்கு இரண்டாம்பட்சம்தான் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.." என்று பாராட்டியுள்ளன பத்திரிகைகள்.அப்படியே இந்த குளிர்பான விளம்பரங்களுக்கும் ஒரு குட்பை சொல்லுங்க சச்சின்... ரூ 5 கூட பெறாத ஒரு பாட்டிலுக்கு ரூ 25 வரை பிடுங்கும் கொள்ளையைத் தடுக்க நீங்க உதவின மாதிரி இருக்கும்!
Read More