Saturday, 25 December 2010

Sudharsan SR

மது விளம்பரம்: 20 கோடிக்கு மறுத்த சச்சின். || 25 கோடிக்கு சம்மதித்த தோனி.

 




ண்மையில் தன்னைத் தேடி வந்த ரூ 20 கோடி விளம்பர வாய்ப்பை நிராகரித்து விட்டார் சச்சின். காரணம், அது ஒரு மதுபான விளம்பரம். மது, சிகரெட் விளம்பரங்களில் ஒருபோதும் தான் நடிக்கமாட்டேன் என்று தன் தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்திருப்பதாகவும், இந்த சத்தியத்துக்காக மட்டுமின்றி,

இன்றைய இளைஞர்களை தவறான பாதையில் தனது விளம்பரங்கள் திருப்பி விடக் கூடாது என்பதற்காகவும் இந்த மாதிரி விளம்பரங்களில் ஒருபோதும் தோன்ற மாட்டேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.பணத்துக்காக எதையும் புரமோட் செய்யத் தயாராக இருக்கிறார்கள் இன்றைய பிரபலங்களில் பலர்.

ஆனால் சச்சின் தனது கொள்கையில் இத்தனை உறுதியாக இருப்பது பலரையும் மூக்கில் விரல் வைக்க வைத்துள்ளது.மதுவிளம்பரத்தை சச்சின் மறுத்தாலும், இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோணி ரூ 25 கோடி சம்பளத்தில் நடித்துத் தர ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

"இளைஞர்களுக்கு சச்சின் எப்படி ரோல்மாடலாகத் திகழ்கிறார்... பணம் என்பது அவருக்கு இரண்டாம்பட்சம்தான் என்பதற்கு இது ஒரு சாம்பிள்.." என்று பாராட்டியுள்ளன பத்திரிகைகள்.அப்படியே இந்த குளிர்பான விளம்பரங்களுக்கும் ஒரு குட்பை சொல்லுங்க சச்சின்... ரூ 5 கூட பெறாத ஒரு பாட்டிலுக்கு ரூ 25 வரை பிடுங்கும் கொள்ளையைத் தடுக்க நீங்க உதவின மாதிரி இருக்கும்!