Monday, 27 December 2010

Sudharsan SR

த்ரிஷாவின் புத்தாண்டு சபதம்

 

நடிகை த்ரிஷா இந்த புத்தாண்டுக்கு புதிய சபதமொன்றை எடுத்திருக்கிறார். தெலுங்கு திரையுலகில் நடிகை இலியானாவுடன் நடந்த கவர்ச்சிப் போட்டியில் தோற்றுப்போய் நம்பர் 1 இடத்தை பறிகொடுத்த த்ரிஷா வரும் 2011ம் ஆண்டில் மீண்டும் நம்பர் 1 ஆக வேண்டும் என்று சபதமேற்றிருக்கிறாராம்.
மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்த குஷியில் இருக்கும் த்ரிஷா, வரும் புத்தாண்டு முதல் பல புதிய சபதங்களே ஏற்கவிருக்கிறார். அதில் ஒன்று தெலுங்கில் மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடிப்பது. தற்போது தெலுங்கில் இலியானா தான் முதலிடத்தில் உள்ளார். இதற்கு முன்பு த்ரிஷா தான் அந்த இடத்தில் இருந்தார். ஆனால் இலியானா தனது கவர்ச்சியால் த்ரிஷாவை ஓரம் கட்டி முதலிடத்திற்கு முன்னேறினார். இதனால் தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த த்ரிஷா, பின்னர் பாலிவுட்க்கு போனார். ஆனால் பாலிவுட் அவரை ஏமாற்றி விட்டது. இருந்தாலும் தமிழில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தமிழில் கமலுடன் இணைந்து நடித்த மன்மதன் அம்பு படம் த்ரிஷாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்திருப்பதால் ஏக குஷியில் இருக்கிறார் த்ரிஷா. இதனிடையே நடிகை இலியானா தமிழுக்கு வரஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார். இதனால் அந்த இடத்தை கப்பென்று பிடித்து மீண்டும் நம்பர் 1 இடத்தை தொட சபதமேற்றிருக்கிறாராம் த்ரிஷா.