பொங்கலுங்கு ரிலீசாகும் படங்களில் காவலன் படமும் ஒன்று, ஆனால் காவலன் படத்த்தை வெளியிட தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. டிசம்பர் மாதமே காவலன் பட வெளியாக இருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து காவலன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், ‘காவலன்’ படத்துக்கான நாளிதழ் விளம்பரங்களில் இடம்பெற்றிருந்த டைரக்டர் ஷக்தி சிதம்பரத்தின் பெயர் தற்போது நீக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க அந்த படத்துக்கான விநியோக உரிமையை விஜய் பெற்றிருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அவரது பெயர் தற்போது நீக்கப்பட்டிருப்பதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர, ஷக்தி சிதம்பரம் திடீரென தலைமறைவாகி விட்டதாகவும் அவரை சிலர் கடத்திச் சென்று விட்டதாகவும் மாறி மாறி கோடம்பாக்க வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
பிரச்சனைகள் அதிகரித்து வருவதை பார்த்து கொதிப்படைந்த விஜய் நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார். இதுவெறும் படம் மட்டுமல்ல என்னுடைய பிரஸ்டீஜ் என்று ஓப்பனாக பேசிவிட்டார். எப்படியாவது படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே தீர வேண்டும் என்று அதிரடியாக கூறிவிட்டார். அதன் விளைவு, படத்தை அவரே நேரடியாக வெளியிட இருக்கிறார். ஷக்தி சிதம்பரத்திற்கு பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு அவரிடமிருந்து படத்தை வாங்கி விஜய்யும், பிரபல பைனான்ஸியர் ஒருவரும் சேர்ந்து வெளியிட இருக்கின்றனர் என்று கூறப் படுகிறது.
இதனையடுத்து காவலன் படம் இந்த பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. படத்தை இன்று வெளியிடாமல் நாளை (15ம் தேதி) வெளியிடுகின்றனர்.