
நடனத்தில் பெரிய வல்லுநர் இல்லை 6 பேக் உடம்பு இல்லை
தலைக்கு சாயம் பூசி வயதை மறைக்கவும் இல்லை
சொந்த குரலில் பாடுவது எழுதுவது எதுவும் இல்லை
தொடர்ச்சியாக ஹிட் படங்கள் கொடுக்கவும் இல்லை ஆனாலும் "தல" என்ற சொல்லுக்கு அதிர்கிறது தியட்டர்
"தல" உன்னை நடிகனாக மட்டும் இல்லை நல்ல மனிதனாகவும் நேசிக்கின்றோம்
இது வரை அவரின் கேரியரில் பார்த்தால்,100 நாட்கள் ஓடிய படங்கள் குறைவு
ஏனென்றால் அவர் மற்றவர்களை போல தன் படம் 100 நாட்கள் ஓடிய ஆக வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்களிடம் சொல்லி தயாரிப்பாளரின் பணத்திற்கு வேட்டு வைக்க மாட்டார்
தன் படம் நல்லா இருந்தால் பார்க்கட்டும் இல்லை என்றல் வேண்டாம் என்று வெளிப்படையாக சொன்ன முதல் நடிகர் அஜித்
மற்றவர்கள் படங்கள் 50 நாட்கள் ஓட்டி ஈட்ட வேண்டிய பணத்தை அஜித் படம் ஒரு வாரத்தில் எடுத்துவிடும் அதுதான் இவருக்கு இருக்கும் மாஸ் ஒபெனிங் அதனால் என்னவோ திரை அரங்கு உரிமைகளர்கள் அஜித் படத்தை அதிக அளவில் வெளியுடுவனர்
அஜித்தின் ஒவ்வெரு படத்திற்கும் அவரின் முந்தைய படத்தை விட ஓபனிங் அதிகமாவே இருக்கும் இது அஜித் என்கிற நடிகனுக்காக இல்லை. அஜித் என்னும் நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத ஒரு உண்மையான மனிதனுக்காக
அஜித் ஆரம்பித்தில் இருந்து இப்போது வரை தன் குணத்தையோ செயல்பாடுகளையோ மாற்றிக்கொண்டதே இல்லை. ஆனால் மக்களை அவர் மாற்றிவிட்டார்.
தன்னுடைய வெளிப்படையான பேச்சிற்காக கிண்டலும் அசிங்கமும் செய்த மக்களே, இன்று அதே வெளிப்படையான பேச்சுக்காவே அவரை ரசிப்பது, நிஜமாகவே அஜித் என்ற மனிதனுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி.
ஒரு படம் வெற்றி அடைவதை விட, ஒரு மனிதன் என்கிற அளவில் அஜித் பெற்றிருக்கும் இந்த வெற்றி இதுவரை சம காலத்தில் எந்த நடிகருக்கும் கிடைக்காதது
நீ எப்பவும் டாப் தான் 'தல