த்ரி இடியட்ஸ் படத்தில் இலியானவை புக் பண்ணியாச்... முதல் பாட்டு கூட ஹாரிஸ் போட்டுட்டாராம்... இப்படி திரும்புகிற திசையெல்லாம் தில்லாலங்கடி பாடிக் கொண்டிருக்கிறது த்ரி இடியட்ஸ் பற்றிய செய்திகள். |
ஆனால் நாம் கேள்விப்படுகிற சில தகவல்கள் இவ்விஷயத்தில் கொசு மருந்து அடிப்பதுதான் ஆச்சர்யம்! சமீபத்தில் முன்னணி வார இதழ் ஒன்றுக்காக ஜீவாவை சந்திக்க போனார் நிருபர் ஒருவர். அவரிடம் 'அண்ணே... என்ன வேணும்னாலும் கேளுங்க. த்ரி இடியட்ஸ் பற்றி மட்டும் வேணாம்' என்றாராம் ஜீவா. அடுத்தடுத்த சில நாட்களில் விஜய்யை சந்திக்க போனார் இன்னொரு நிருபர். அவரது பி.ஆர்.ஓ, 'சாரிடம் த்ரி இடியட்ஸ் பற்றி எதுவும் கேட்டுற வேண்டாம்' என்றாராம். இந்த வாரம் முன்னணி வார இதழ் ஒன்றில் டைரக்டர் ஷங்கரின் பேட்டி கூட வந்திருக்கிறது. இதிலும் ஒரு ஃபார்மாலிடிக்கு கூட த்ரி இடியட்ஸ் பற்றி கேள்வியில்லை. அப்படின்னா என்னதான் நடக்குது. சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படையாக வாயை திறக்காத வரை முட்டைக்குள் இருப்பது ஆம்லட்டா, பொடிமாஸ்சா என்கிற குழப்பம் தொடரும்! |
Wednesday, 3 November 2010
த்ரி இடியட்ஸ் பற்றி கேட்காதீங்க : ஹீரோக்கள் கப்சிப்!
Sudharsan SR
00:46:00
1 comments:
Write commentsஹீரோக்கள் கப்சிப்!
Reply