Wednesday, 8 December 2010

Sudharsan SR

மன்மதன் காவலன் மோதல்

 

இந்த மாதம் கமலின் மன்மதனும், விஜய்யின் காவலனும் நேருக்குநேர் மோதுகிறது. இதனை இரு தரப்பும் உறுதி செய்துள்ளது.

பொதுவாக கமல் படம் வெளியானால் மற்ற நடிகர்கள் அதே தேதியில் தங்களது படத்தை வெளியிட தயங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம் கமல் படம் மற்ற ஹீரோக்களின் படங்களைப் போலதான் வந்து போகிறது. 

மேலும், மன்மதன் அம்பு பெ‌‌ரிதாக எந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கவில்லை. தெனாலி, பஞ்சதந்திரம் மாதி‌ி இதுவும் ஒரு காமெடிப் படம் என ரசிகர்கள் ‌ரிலாக்ஸாக உள்ளனர்.

இதனால் மன்மதன் அம்பு வெளியாவதாக கூறப்படும் அதே 17ஆம் தேதி விஜய்யின் காவலனை வெளியிட உள்ளனர். 17ஆம் தேதி படம் வெளிவரும் என்பதை ஒரு சவாலாகவே கூறியுள்ளார் படத்தின் ஒட்டுமொத்த உ‌ரிமையை வாங்கியிருக்கும் ஷக்தி சிதம்பரம்.