Monday, 6 December 2010

Sudharsan SR

ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் விஜய் ! !

 

நடிகர் விஜய், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசப் போவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் அரசியல் பிரவேசத்திற்கு முன்பு தனது பலத்தை காட்டும் வகையில் பிரமாண்டமான முறையில் ரசிகர் மன்ற மாநாட்டை நடத்தவும் அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். சமயம் வரும்போது அதுகுறித்து அறிவிப்பேன் என்றும் ஏற்கெனவே அவர் அறிவித்தார். சமீபத்தில் டெல்லி சென்று ராகுல் காந்தியையும் சந்தித்தார். 


இதனால் அவர் காங்கிரஸில் சேருவாரோ என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் அவர் காங்கிரஸில் சேரவில்லை.இந்த நிலையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களது கருத்துகளை விஜய் கேட்டறிந்தார். அப்போது பெரும்பான்மையான நிர்வாகிகள் தனிக்கட்சி துவங்க வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில் தனிக்கட்சி மூலம் அரசியல் களத்தில் இறங்கலாம் என அவர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன் தன் ரசிகர்களை வைத்து பிரமாண்ட மாநாடு நடத்தி பலத்தைக் காட்டவும் முடிவெடுத்துள்ளாராம்.இந்த மாநாட்டில் அரசியல் முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதைவிட முக்கியம், விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனும் இன்று ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசப் போவதாக பரபரப்பாக பேசப்படுகிறது.