Tuesday 26 April 2016

Ram

‘விஜய் 60’ படத்தில் இணைந்த மற்றொரு நாயகி!

‘இளையதளபதி’ விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற்றது.

இதைதொடர்ந்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் மே 2-ம் தேதி பின்னி மில்லில் தொடங்குகிறது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லன்களாக நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு நாயகியாக அபர்ணா வினோத் என்பவர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மலையாளத்தில் வெளியான Njan Ninnodu Koodeyundu என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்