நடிகை லஷ்மிராய் நடித்த படங்கள் அவ்வளவாக ஓடாவிட்டாலும் 2 மொழிகளில் அவர் பிசியாகவே நடித்து வருகிறார்.
தமிழில் ஏராளமான படங்களில் கவர்ச்சியாக நடித்தவர் லஷ்மிராய். தாய்மொழியான கன்னடப்படத்தில் அதிகம் நடிக்காவிட்டாலும் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் கோலோச்சி வருகிறார்.
தமிழில் தற்போது அஜீத்துடன் மங்காத்தா, ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் லஷ்மி ராய்.
மலையாளத்தில் கிறிஸ்டியன் பிரதர்ஸ், கேஸனோவா, யோதா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் லட்சுமி ராய்.
மங்காத்தா தவிர தமிழில் லட்சுமி ராய் நடித்து வரும் இன்னொரு படம் காஞ்சனா. முனி படத்தின் 2வது பாகமாக இது உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.