Monday, 15 November 2010

Sudharsan SR

சூர்யாவை காய விடும் ஸ்ருதிஹாசன்

 

நடிகை, இசையமைப்பாளர், நடனக் கலைஞர் என பன்முகங்களை கொண்ட ஸ்ருதிஹாசன் ‘7ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார். ‘7ஆம் அறிவு’ ஸ்ருதியின் முதல் படம் என்ற போதிலும் அறிமுக நாயகியை போல நடக்க மறுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
AR முருகதாஸ் இயக்கத்தில், சூர்யாவின் ஜோடியாக ‘7ஆம் அறிவு’ படத்தில் நடித்து வரும் ஸ்ருதி, படப்பிடிப்பு தளத்திற்கு எப்பொழுதும் தாமதமாகவே வருகிறாராம். முருகதாஸ், சூர்யா மற்ற கலைஞர்கள் என அனைவரும் ஸ்ருதிக்காக வெகு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறதாம். சூர்யா பல்லைக் கடித்துக் கொண்டு இதனை பொறுத்திருக்க மற்றவர்கள் முடியாமல் தவிக்கிறார்களாம்.
இருப்பினும் ஸ்ருதிஹாசன் உலகநாயகனின் மகள் என்பதால், யாரும் அவரிடம் கோபப்படவோ, இது பற்றி கேட்கவோ மறுக்கிறார்களாம். ஸ்ருதியிடம் கோபப்படுவதால் கமல் வருந்திவிடக்கூடாது என அஞ்சுகின்றனராம்.
கமல்ஹாசன் மிகப்பெரிய நட்சத்திரமாக உள்ள போதும், அவர் மீது இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்ததில்லை. அவரின் அர்பணிப்பு உணர்வு உலகறிந்தது. ஸ்ருதி தனது தந்தையை போல் இல்லாவிட்டாலும், தந்தையின் பெயருக்கு கலங்கம் விளைவிக்காமலாவது பார்த்துக் கொண்டால் நலம்