Monday, 15 November 2010

Sudharsan SR

மங்காத்தாவில் குறைய போகும் ஒரு கை.

 

மங்காத்தா படத்தின் மாஸ் ஸ்டார் காஸ்ட்டைப் பார்த்தால் ரங்கநாதன் தெரு மாதிரி கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. தல அஜித்தின் 50ஆவது படமான மங்காத்தா ஆக்‌ஷன் விளையாட்டில், ‘நமக்கும் ஒரு கை போடுப்பா’ என்று ஆளாளுக்கு உள்ளே வெளியே ஆடிக்கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி நாகார்ஜுன் வெளியே சொல்லிவிட்டு வெளியேறிவிட முடிவு செய்திருகிறாராம். இதனால் நாகார்ஜுனை ரீபிளேஸ் செய்ய உள்ளே வருபவர் அர்ஜுன் என்கிறார்கள் இயக்குனர் வட்டாரத்தில்.
அர்ஜுன் இதில் மும்பை கேங்ஸ்டராக நடிக்கிறார். அஜித், அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், வேதிகா, மஞ்சு மனோஜ், பிரேம்ஜி அமரன், கணேஷ் வெங்கட் ராம் என்று களம் காணும் கைகளின் எண்ணிக்கை எகிறி விட்டது. தற்போது அஜித்-த்ரிஷா ஜோடி பாங்காக்கில் டூயட் மங்காத்தா ஆடிக்கொண்டிருகிறார்கள். அங்கே போன இடத்தில் பொழைப்பைப் பார்க்காமல் நிஜமாவே பொண்ணு சூதாட்டத்துல கொஞ்சம் துட்டை விட்டுருச்சாம் ! !