Tuesday, 16 November 2010

Sudharsan SR

இப்படியும் படத்தலைப்புகள் வரலாம்!

 

சென்னையில் கல்லூரி இளசுகளிடையே ஒரு எஸ்.எம்.எஸ். ரொம்ப பிரபலமாகி வருகிறது சமீப காலமாக...! அது கோலிவுட் நாயகர்களின் பட டைட்டில்களைப் பற்றிய நக்கலும் நையாண்டியும்தான் என்பது ஹைலைட்.
சுறாவை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் படங்களின் தலைப்பு நெத்திலி, கருவாடு, வஞ்சிரம், திமிக்கலம் என்பதாக இருக்குமாம். மங்காத்தாவில் நடித்து வரும் அஜித்தின் அடுத்தடுத்த படத் தலைப்புகள்... மாரியாத்தா, செல்லாத்தா என்பதாக இருக்குமாம். தனுஷ் படிக்காதவனைத் தொடர்ந்து எழுதாததவன், விளங்காதவன் உள்ளிட்ட படங்களிலும், ஜீவா எஸ்.எம்.எஸ் படத்தை தொடர்ந்து எம்.எம்.எஸ், மிஸ்ட்கால், டயல்ட் கால் உள்ளிட்ட படங்களிலும், விஷால் சத்யம் படத்தை தொடர்ந்து இன்போசிஸ், விப்ரோ பெயரை உ‌டைய படங்களிலும், சிம்பு சுவரைத்தாண்டி வருவாயா, துண்டைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களிலும், மாதவன் குரு என் ஆளு, கவிதா உன் ஆளு, ரஞ்சிதா சுவாமிஜி ஆளு உள்ளிட்ட படங்களிலும் நடிப்பதாக சொல்லி கிண்டலடிக்கிறது அந்த இளசுகளின் எஸ்.எம்.எஸ்.! 



‌கோடம்பாக்கத்தின் டைட்டில் பஞ்சம் இப்படியும் தலைப்புகளை சூட்ட வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார் வேதனையுடன் ஒரு ரிட்டயர்டு கோலிவுட் டைரக்டர்