Friday, 12 November 2010

Sudharsan SR

“மர்மயோகி”க்கு வெள்ளோட்டமாய் வரும் :தலைவன் இருக்கின்றான்”

 

உலகநாயகன் கமல்ஹாசனின் கனவுப் படமான ‘மர்மயோகி’-யின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கமல் மன்மதன் அம்பு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது. இதையடுத்து கமல் உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு முன்பு அறிவித்த தலைவன் இருக்கின்றான் படத்தை தொடங்கயிருக்கிறார். தலைவன் இருக்கின்றானை கமலின் ரா‌ஜ்கமல் பிலிம்ஸுடன் இணைந்து ஹாலிவுட் நிறுவனம் ஒன்று தயா‌ரிக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்து நின்றுபோன மர்மயோகி மீண்டும் தூசு தட்டப்பட வாய்ப்புள்ளது.