3 இடியட்ஸ் கிட்ட தட்ட உறுதியாகிவிட்டது. ஷங்கர் டிசம்பர் 5ல் ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறார். இதற்காக ஷங்கர் டெல்லி சென்றிருக்கிறார் என்கிறது செய்தி.
இதில் முதல் இரண்டு ரோல்களுக்கு விஜய், ஜீவா தயாராகி விட 3 வது ரோலை செய்ய தமிழ் ஆள் தேடுவது பெரும்பாடாகி விட்டது ஷங்கருக்கு. ஸ்ரீகாந்த் தானாவே வந்து இந்த வேடத்தில் நடிக்கிறேன் என்று சொல்ல அவரும் ஆட்டத்தில் சேர்ந்து கொண்டார், இப்போது இவருக்கு போட்டியாக உன்னாலே உன்னாலே வினயும் ஆட்டத்தில் சேருகிறார். ஷங்கர் இன்னும் இவர்களில் யாரென்று முடிவு செய்யவில்லை என்று தெரிகிறது. விரைவில் எல்லா செய்திகளும் ஒன்றாக வரும்.