இயக்கத்தில் ரஜினியுடன் நடிப்பதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றார் நடிகர் கமல்ஹாஸன். ஷங்கர் தற்போது இந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் வேலையில் மும்முரமாக உள்ளார். விஜய் உள்ளிட்ட 3 பேர் நாயகன்களாக நடிக்கின்றனர்.
இந்த படம் முடிந்ததும் ரூ.500 கோடி பட்ஜெட்டில் ரஜினி, கமல் நடிக்கும் படத்தை ஷங்கர் துவங்குவார் என்றும் செய்திகள் பரவின. இது கல்கியின் பொன்னியின் செல்வனை மையப்படுத்தி எடுக்கப்படுவதாகவும், ரஜினி வந்தியத் தேவன் பாத்திரத்தில் நடிப்பார் என்றும் செய்தி பரவியது.
சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த செய்தியை சன் நெட்வொர்க் பத்திரிகைகள் மற்றும் இணையதளத்திலும் வெளியிடவே, இதனை உண்மையாக இருக்கும் என்றே நம்பிவிட்டனர் பல ரசிகர்களும். ஆனால் சம்பந்தப்பட்ட யாரும் இதுபற்றி வாயே திறக்கவில்லை.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் கமல்ஹாஸனிடம் நிருபர்கள் இதுபற்றிக் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:
“ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினியும், நானும் நடிக்கிறோம் என்றும், அதன் பட்ஜெட் ரூ 500 கோடி என்றும் நீங்கள் சொல்லித்தான் எனக்கும் தெரியும். அது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. ஷங்கரிடம் இருந்து அதுபோன்று ஒரு படத்தில் நடிக்க அழைப்பும் வரவில்லை,” என்றார்.