Friday, 12 November 2010

Sudharsan SR

அஜித்க்காக காத்திருக்கும் விஷ்ணுவர்தன்..

 

டல்லா இருந்த தன்னுடைய கேரியர் கிராப்பை மாற்ற அதிரடி முடிவெடுத்தார் அஜித். அதில் முதல் படி மங்காத்தா, அடுத்து விஷ்ணுவர்தனுடன் பில்லா 2, அதற்கடுத்து மதராஸ பட்டிணம் விஜயுடன் ஒரு படம் என்று அடுத்தடுத்த ஆரவாரங்களுடன் ஆரம்பித்திருக்கிறார். மங்காத்தா பரபரவென ஷுட்டிங்க் போக அடுத்த படத்திற்கான வேலையில் விஷ்னுவர்தன் பயங்கரபிஸி.
அவர் மங்காத்தா முடிந்து வரும்போது விஷ்ணு பில்லா 2 க்கு தயாராய் இருக்கவேண்டும் என்பது “தல” உத்தரவு. அதற்கேற்றபடி விஷ்ணுவும் தனது உதவி இயக்குனர்களுடன் நெடும் விவாதத்திற்கு பிறகு பில்லா 2விற்கான கதையை தயாராக்கி விட்டார். பில்லாவில் பெரிதும் பேசப்பட்டது யுவனின் இசை ஆனால் அதைவிட சிறந்த இசையை யுவனிடம் கேட்டிருக்கிறார் விஷ்ணு. இனி தல, தளபதிகளின் சரவெடிகள் எப்போதும்.