அசின் பல பாலிவுட் ஹீரோக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். கடைசியாக காக்க காக்க ஹிந்தி ரீமேக்கில் ஜோதிகாவின் காதாபாத்திரத்தை நிரப்ப அசின் சரியாக இருப்பார் என்று தயாரிப்பாளர் ஒத்தைக் காலில் நிற்க, சூர்யா பாத்திரத்தை ஏற்ற ஜான் ஆப்ரஹாம் முதலில் அசினுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் அசின் வேண்டாம் என்று தூக்கியடித்தார்.
ஜானின் இந்த பல்டியின் பின்னணியில் அவரது முன்னால் கேர்ள் பிரண்ட் பிபாஷா பாசு இருந்தார் என்று கிசுகிசு கிளம்பி அடங்கியது. ஜானின் பிடிவாததுக்கு மருந்து போட விரும்பிய தயாரிப்பாளர் அசினை தூக்கி விட்டு, அந்த இடத்தில் ஜெனிலியாவை ஒப்பந்தம் செய்தார்.
இப்போது அசினின் முறை… ரெடி படத்துக்காக இலங்கை சென்ற அசின் படப்பிடிப்பு வேலையை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பி வராமல் அகதிகள் முகாம்களுக்கு ராஜபக்ஷே மனைவியுடன் சென்றது, தமிழ்நாட்டுத் தமிழர்கள், உலகத் தமிழர்களைப் பெரிதும் அதிருப்தியடைய வைத்தது. இந்நிலையில் பாடிகார்டு தமிழ் ரீமேக்கான “காவலன்” படத்தில் விஜய்யுடன் மூன்றாவது முறையாக அசின் ஜோடி சேர்ந்தார். விஜய் படமென்றாலும் அசின் அந்தப் படத்தில் இருந்ததால் எதிர்ப்பு அதிகரித்தபடியேதான் இருந்தது. இந்த நேரத்தில் தமிழர்கள் தன்மீது கொண்ட கோபத்தைத் தணிக்க சரியான வாய்ப்பு வந்ததும் அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
நடந்தது இதுதான் :
தமிழ், தெலுங்கைத் தொடர்ந்து, பாடிகார்ட் படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்ய இருக்கிறாகள். ரீமேக் செய்பவர் சல்மான் கானின் சகோதரி அல்விரா. சல்மான் கான் இந்தப் படத்துக்கும் மூன்றாவது முறையாக அசினையே ஹீரோயினாகக் கேட்க, சல்மான் மீது கோபத்தில் இருக்கும் தமிழர்களைக் குஷிப்படுத்த இதுதான் சரியான தருணம் என்று எண்ணிய அசின், சல்மானுடன் இனி சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று அதிகாரபூர்வமாக மறுத்துவிட்டார். இதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் “மேலும் மேலும் ஒரே ஹீரோவுடன் நடிப்பதை நான் விரும்பவில்லை” என்று. இதனால் சல்மான் செம டென்ஷனாகியிருக்கிறாராம்.