Wednesday, 3 November 2010

Sudharsan SR

காத்திருந்த விஜய், காத்திருக்கும் தனுஷ்!

 

வழக்கமா ஹீரோயினுக்கு அடம்பிடிப்பவர்கள் ஹீரோக்கள். எனக்கு அந்த நடிகையை ஜோடியா போடுங்க, இந்த நடிகையை புக் பண்ணுங்கன்னு. இதுல சூப்பர் ஸ்டாரும் விதி விலக்கு அல்ல. ஏனெனில் படையப்பாவுல இருந்து ஐஸ்வர்யா ராய்க்கு வலை வீசி வந்தவர் சூப்பர் ஸ்டார். ஆனால் இப்போ எல்லோரும் ஹீரோயினை விட்டுட்டு தன்னுடன் நடிக்கும் சக நடிகருக்காக தவம் கிடக்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த லிஸ்ட்ல டாப்புல இருக்கவர் நம்ம ராஜ்கிரண்.
ஒரு முன்னணி ஹீரோ வாங்குகிற அளவுக்கு கை நிறைய வாங்குகிறார் ராஜ்கிரண். அதில் பைசா குறைந்தாலும் அவரது அடர்ந்த மீசைக்கு கீழே பதுங்கிக் கொள்கிறது புன்னகை. அப்படியிருந்தும் ராஜ்கிரண் கால்ஷீட்டுக்காக கால் கடுக்க நிற்கிறது கோடம்பாக்கம்.
“காவலன்” படத்தில் விஜய்யின் முதலாளியாக நடிப்பவர் ராஜ்கிரண்தான். அசினுக்கு அப்பாவாக என்றும் வைத்துக் கொள்ளலாம். முதலில் இந்த கேரக்டரில் மம்பட்டியான் தியாகராஜனைதான் நடிக்க வைக்க நினைத்தாராம் சித்திக். காவலனின் ஒரிஜனல் படைப்பான பாடிகாட் படத்திலும் தியாகராஜன்தான் அந்த கேரக்டரில் நடித்தார்.
ஆனால் சித்திக்கின் விருப்பத்தில் கட்டையை போட்டதுடன், அவருக்கு பதிலாக ராஜ்கிரண் இருந்தா நல்லாயிருக்குமே என்று சாய்ஸ் தேடியவர் சாட்சாத் விஜய்தான் என்கிறார்கள். பாடிகாட்டில் சிறிது நேரமே வந்து போகிற இந்த கேரக்டரை தமிழில் இன்னும் விரிவு படுத்த சொன்னதும் விஜய்தானாம்.
இப்படி தளபதி மனசில் வலைகட்டி குடியிருக்கும் ராஜ்கிரண் இன்னொரு முன்னணி ஹீரோவின் மனசிலும் இடம் பிடித்துவிட்டார். ஹரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திலும், ராஜ்கிரண் நடிக்கிறார். இவர்தான் நடிக்க வேண்டும் என்பதை ஹரியிடம் தன் விருப்பமாகவே தெரிவித்தாராம் தனுஷ்.