Saturday, 30 October 2010

Sudharsan SR

காவலன் ! !

 

விஜய்;இந்த படத்தையும் ஓட வைக்கலைன்னா உனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய கோபுரம்;உனக்கு எதுக்கு மூணு கால பூஜை;அர்ச்சனை..ஆரத்தி எல்லாம் எதுக்கு..எதுக்கு?
கடவுள்;பரதேசி...பரதேசி..கதை கேட்கும் போது நீ..தூங்கிட்டு என்னை வந்து திட்றியா...?

காவலன் விஜய் படம் பற்றி தமிழகம் முழுக்க எதிர்பார்ப்பு எகிறி கொண்டிருக்கிறது...தீபாவளி அன்று படம் வெளிவந்து அந்த நாளை துக்க நாளாக மாற்றி விடுமோ என மக்கள் அஞ்சி கொண்டிருந்தனர்...ஆனால் அந்த கஸ்ட நாள் தள்ளி போய் விட்டது.

.இனி குவார்ட்டர் கட்டிங் அடிச்சி அந்த நாளை கொண்டாடலாம்.அதாங்க குவார்ட்டர் கட்டிங் படம் வருது..இதுல பில்டப் இல்ல...பஞ்ச் இல்ல..ஓபனிங் டிராயர் கிழிக்கிற பாட்டு இல்ல..மூக்குல ரத்தம் வந்த பின்னாடி துடைச்சிட்டு போடுற சண்டை காட்சிகள் இல்ல.மொத்தத்துல சினிமாங்கிறது கேரவன் ல கக்கா போறவனை நம்பி இல்ல.திரைக்கதை ..இயக்கத்தை நம்பி இருக்குன்னு சொல்ல மைனா,குவார்ட்டர் கட்டிங் படங்கள் வருகின்றன..

டைரக்டர் ஸ்பெசலான இந்த இரண்டு படங்களையும் தவறாமல் பார்த்து ,விரல் சுழற்றும் விடலைகளை விரட்டி அடிப்போம்...உண்மையான திறமையாளனுக்கு வெளிச்சம் காட்டுவோம்..
.
விஜய் ,கவுண்டமணி உலகப்புகழ்பெற்ற வீடியோ...இந்த வீடியோவை பார்க்கும் முன் சிரித்து சிரித்து ஏற்படப்போகும் வயிற்று வலிக்கான மாத்திரை எடுத்து வைத்துக்கோள்ளவும்..