Saturday, 14 September 2013

Ram

தென்னிந்திய திரைப்பட விருதுகள் : தனுஷ், விக்ரம் பிரபு, லட்சுமிமேனனுக்கு விருது!!

தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழா 12, மற்றும் 13ந் தேதிகளில் துபாயில் நடந்தது. இதில் முதல் நாள் நடந்த விழாவில் சிறந்த புதுமுக நடிகருக்கான விருது கும்கி படத்தில் நடித்ததற்காக விக்ரம் பிரபுக்கு வழங்கப்பட்டது. சுந்தரபாண்டியன் படத்தில் நடித்ததற்காக லட்சுமிமேனனுக்கு வழங்கப்பட்டது.

இதுதவிர சிறந்த நடன ஒளிப்பதிவாளருக்கான விருது கும்கி ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு கிடைத்தது. அரவான் படத்தில் நிலா நிலா பாடலுக்கு நடனம் அமைத்த காயத்திரி ரகுராமிற்கு சிறந்த நடன இயக்குனருக்கான விருது கிடைத்தது. சிறந்த சண்டை இயக்குனருக்கான விருது துப்பாக்கி படத்தில் பணியாற்றிய கீச்சாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பாடலாசிரியராக தனுஷ் தேர்வு பெற்றார். 3 படத்தில் கண்ணழகா பாடலை எழுதியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. கொலைவெறி பாடலை பாடியதற்காக சிறந்த பாடகர் விருதும் தனுசுக்கே கிடைத்தது. பின்னணி பாடகிக்கான விருது சைந்தவிக்கு கிடைத்தது. சிறந்த இசை அமைப்பாளராக துப்பாக்கி இசை அமைப்பளார் ஹாரிஸ் ஜெயராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த புதுமுக இயக்குனராக பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தேர்வு பெற்றார். சிறந்த புது தயாரிப்பாளருக்கான விருது அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு கிடைத்தது. இதே போன்று மற்ற மொழி கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. நித்யாமேனன், இசை அமைப்பாளர் அனிருத், உதயநிதி ஸ்டாலின், ஸ்ருதிஹாசன், அசின், காஜல் அகர்வால் ஆகியோருக்கும் பல்வேறு கேட்டகிரியில் சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.