Saturday, 14 September 2013

Ram

படபிடிப்புக்காக லண்டன் பறக்கும் அனிருத்!

வணக்கம் சென்னை படத்தின் இசையமைப்பாளர் அனிருத். அவர் அப்படத்தில் பாடியுள்ள பாட்டு ஒன்று லண்டனில் படமாக்கப் படவுள்ளது. இதற்காக அனிருத்தும் அவரது குழுவினரும் லண்டன் பறக்க உள்ளனராம். ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் புகழ்பெற்ற அனிருத், அதைத் தொடர்ந்து எதிர்நீச்சல் படத்திலும் வெற்றி பெற்றார். அந்த வெற்றி வரிசையில் அடுத்து இடம் பெற போகும் படம் வணக்கம் சென்னை. 

வணக்கம் சென்னை படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் கிருத்திகா உதயநிதி தயாரிக்கிறார். சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடிக்கிறார்கள். பாடல் கவிஞர் நா. முத்துக்குமார். இப்படத்தில் வரும் ஓ பெண்ணே பாடலின் இசை வீடியோ படப்பிடிப்பிற்காக அனிருத்தும், அவரது குழுவினரும் லண்டன் செல்லவுள்ளனர்.  இப்பாடலை அனிருத் மற்றும் விஷால் டட்லானி ஆகியோர் பாடியுள்ளனர்.