Saturday, 14 September 2013

Ram

கைதானார் காதல் கோட்டை தயா‌ரிப்பாளர்

அ‌‌ஜீத் நடித்த வான்மதி, காதல் கோட்டை உள்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களை தயா‌ரித்தவர் சிவசக்தி பாண்டியன். இவருக்கும் மதுரை விநியோகஸ்தர் அன்புசெழியனுக்கும் இடையில் நடந்த பண ப‌ரிவர்த்தனை சிக்கலாகி கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இந்த வழக்கில் ஆஜராகும்படி பலமுறை கோர்ட் அறிவுறுத்தியும் ஆஜராகாமல் இருந்து வந்திருக்கிறார் சிவசக்தி பாண்டியன்.

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸார் அவரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.

காதல் கோட்டை, காதலே நிம்மதி என்று அடுத்தடுத்து வெற்றிகள் தந்து சிவசக்தி பாண்டியன் முன்னணி தயா‌ரிப்பாளராக இருந்த நேரம், படம் இயக்க வாய்ப்பு தரும் இயக்குனர்களிடம் அவர் கடுமையாக நடந்து கொள்வதாக சர்ச்சை எழுந்தது. இயக்குனர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் பெற்றோரின் ஸ்தானத்தில் இருந்து கண்டிக்கிறேன் என்று பதிலளித்தார் சிவசக்தி பாண்டியன்.

தயா‌ரிப்பாளர்கள் சங்க நிர்வாகியாகவும் சிவசக்தி பாண்டியன் இருந்துள்ளார்.