Saturday, 14 September 2013

Ram

செப்.19 ஆரம்பம் ஆடியோ

                    


ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அ‌‌ஜீத்தின் ஆரம்பம் படத்தின் பாடல்கள் வரும் 19ஆம் தேதி வெளியிடப்படுகிறது.


விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பில்லாவுக்குப் பிறகு அ‌‌ஜீத் நடித்திருக்கும் படம் ஆரம்பம். யுவன் ஷங்கர் ராஜா இசை. பில்லாவின் இசையும், பாடல்களும் ஹிட் என்பதால் ஆரம்பத்துக்கும் அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. 

ஆரம்பம் தீபாவளிக்கு வெளியாகும் என்பதை தயா‌ரிப்பு தரப்பு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் படத்தின் பாடல்களை செப்டம்பர் 19ஆம் தேதி வெளியிடுவது என சோனி மியூஸிக் முடிவு செய்துள்ளது. 

தனது படத்தின் எந்த புரமோஷனிலும் அ‌‌ஜீத் கலந்து கொள்வதில்லை என்பதால் பாடல்களை விழா வைத்து வெளியிடாமல் நேரடியாக கடைகளில் கிடைக்கும்படி செய்திருக்கிறது சோனி மியூஸிக். 

படத்தில் அ‌‌ஜீத்தின் அறிமுக பாடல், அடடா ஆரம்பம் உள்பட ஐந்து பாடல்கள் உள்ளன.