Saturday, 14 September 2013

Ram

தவிக்கவிட்ட அஜித்... ஆதரித்த ஆர்யா!

தலைவா' படத்துக்குப் பிறகு அஜித் கால்ஷீட் தருவார் என்று குஷன்மெத்தையில் குப்புறப் படுத்துக் கனவு கண்டார் டைரக்டர் விஜய். 

அந்த விஷயம் தற்போது பகல் கனவாகி விட்டதாம். அதனால் தவித்துப்போன ஏ.எல்.விஜய் தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் அடுத்த பட வேலையில் இறங்கிவிட்டார். 

குழந்தைகளை மையமாகக் கொண்டு இயக்கும் இந்தப் படத்துக்காக 'தெய்வத்திருமகள்' சாராவின் கால்ஷீட்டைக் கொத்தாக வாங்கி இருக்கிறார் விஜய். 

'இதுவரை உலகத்துல எடுத்த படத்தைத்தான் தமிழ்நாட்டுல பேசவச்சேன். தமிழ்நாட்ல எடுக்குற இந்தப்படம் உலகம்பூரா பேசப்படும்' என்று சூளுரை நிகழ்த்துக்கிறார். 

படத்தில் முக்கியமான கெஸ்ட் ரோலில் நட்புக்காக ஆர்யா நடிக்கிறார். சின்ன பட்ஜெட் படம் என்பதால் தயாரிப்பு, டைரக்‌ஷன் இரண்டும் விஜய்தான்!