Saturday, 14 September 2013

Ram

2ம் கட்ட படப்பிடிப்பில் சிப்பாய்!

 
    சி லம் பாட்டம் புகழ் சரவணன் இயக்கும் சிப்பாய் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெகு ஜோராக தொடங்கியுள்ளது. இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.  மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக், அந்த படத்தில் தனது திறமையை காட்டியிருந்தாலும், படம் பேசப்படவில்லை. இதனால், தனது இரண்டாவது படமான சிப்பாய், நிச்சயம் தனக்கு வெற்றியை தரும் என கௌதம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார். கல்லூரி பருவத்தில் தோன்றும் காதலை சொல்லும் இப்படம், ஒரு நல்ல பொழுது போக்கு படமாக அமையும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.