அஜித் தனது 50-வது படமான மங்காத்தாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகு ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லியிருக்கும் அஜித்,
சர்வதேச டானாக நடிக்க இருக்கும் பில்லா பாகம் இரண்டை உடனே துவக்கி விட வேண்டும் என்று சொல்லியிருப்பதோடு படத்தின் இயக்குனர் விஷ்ணு வர்த்தனுக்கு ஒரு ஸ்பெஷல் அனுமதி கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
படத்துக்கு நீரவ்ஷா ஒளிபதிவாளர் என்று முடிவாகியிருக்கும் நிலையில் பில்லா-2ன் காட்சிகளை மிகவும் ஸ்டைலாக எடுக்க ஹாலிவுட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் புதியதலைமுறை பேந்தம் கேமராக்களை பயன் படுத்தி படத்தை எடுக்க அணுமதி கேட்டிருக்கிறார் அஜித்திடம்.
அவர் அனுமதி கேட்கும் கேமராக்களில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களின் காட்சிகளையும் அஜித்துக்குப் போட்டுக் காட்டி, அஜித்தை சம்மதிக்க வைத்திருக்கிறார்கள் விஷ்ணுவும் நீரவ்ஷாவும்! கமல் வழியில் புதிய தொழில்நுட்பங்களை காதலிக்க ஆரம்பித்து விட்டார் தல அஜித்!
அஜித் தனது 50-வது படமான மங்காத்தாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகு ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லியிருக்கும் அஜித்,