காவலன் தொடர்ந்து 6 படங்களின் தோல்விக்கு பிறகு வரும் விஜய் படம், படம் மலையாளப்படத்தில் ரீமேக் என்பது அனைவரும் அறிந்தது, இப்போது நாம் படத்தை பற்றி பேசப்போவது இல்லை பாடல்கள் மட்டுமே.
இன்று தான் இசை வெளியிடு என்று சொல்லி இருந்தார்கள் இருந்தாலும் இணையத்தில் நேற்றே கிடைக்க ஆரம்பித்துவிட்டது.
ஏற்கனவே குருவியில் கூடிய அதே விஜய் வித்யாசாகர் கூட்டணி.. படத்தில் 5 பாடல்கள், ஒன்று விஜய்க்கு ஓபனிங்க் பாட்டு, அடுத்து விஜய் டான்ஸ் டான் அப்படின்னு நிரூப்பிக்க ஒரு பாட்டு, மேலும் 3 மெலடிகள்..
விஜயின் சமீபகால ஓடாத படங்களின் இசையை ஒப்பிடும் போது இதில் பாடல்கள் சுமார் என்றுதான் சொல்ல வைக்கிறது. வேட்டைகாரனின் ஒரு சின்னத்தாமரை இன்றும் கேட்கும்படி இருக்கிறது ஆனால் காவலனில் அது மிஸ்ஸிங்..
பட்டாம் பூச்சி கூப்பிடும் போது பூ ஓடாதே…
காதல் தேனை சாப்பிடும் போது பேசகூடாதே…
யானை தந்ததின் சிலை நீயே….
இந்த படத்தின் டாப் பாட்டு இதுதான் இந்த பாட்டை கபிலன் எழுதி இருக்கிறார், கே.கேவும் ரீட்டாவும் பாடி இருக்கிறார்கள்..
தட தட என ரயில்யென கொஞ்சம்….
அடி கடி அடி கடி துடிக்குது நெஞ்சம்…
இது அடுத்த பாட்டு, பாடல் வரிகள் புரியும் படி இருப்பதால் கேட்க நன்றாக இருக்கிறது,யுக பாரதி எழுத கார்த்திக் பாடி இருக்கிறார்.
யாரது யாரது யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடி செல்வது யாரது…
நெருங்காமல் நெருங்கி வந்தது விலகாமல் விலகி நிற்பது
இந்த பாடலை யுகபாரதி எழுத கார்த்திக் சுசிதரா பாடி இருக்கிறார்கள்.. இது ஓகே ரகமான பாடல்தான்.
மற்றப்பாடல்கள் எதுவும் இந்த சொல்லிக்கொள்வது போல் இல்லை, கேட்டவுடன் ஒட்டும் இசையும் இல்லை பாடல்களும் இல்லை. விஜயின் படம் எப்படி இருந்தாலும் அவரின் படத்தின் பாடல்கள் நம்ம ஊர் கிராமங்களில் பட்டி தொட்டி எல்லாம் பாடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் வித்தியாச சாகரின் இந்த வித்தியாசமான இசை அதை அடைய முடியுமா என்பது சந்தேகமே..
கோட்டை விட்டுட்டீங்களே விஜய்
1 comments:
Write comments