அஜித்தின் 50வது படமான மங்காத்தா சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில்
மங்காத்தா குழுவினருக்கு பிரியாணி விருந்து படைத்து அசத்தியிருக்கிறார் அஜித். மே மாதம் 1ம்தேதி அஜித்தின் பிறந்த நாளில் வெளியிடும் திட்டத்துடன் மங்காத்தா படம் வளர்ந்து வருகிறது. டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். இந்த படத்திற்காக காலை, மாலை என கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை சிக்கென ஆக்கியிருக்கும் அஜித் சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்பவே ஆக்டிவ்வாக இருக்கிறாராம்.
கார் ஓட்டுவதில் மட்டுமல்லாமல், சமையல் கலையிலும் கைதேர்ந்தவரான அஜித் சமீபத்தில் மங்காத்தா குழுவினருக்காக ஸ்பெஷல் பிரியாணி விருந்து படைத்திருக்கிறார்.
Thursday, 4 November 2010
மங்காத்தா குழுவுக்கு அஜித்தின் பிரியாணி
Sudharsan SR
15:14:00
Post a Comment