Friday, 22 October 2010

Sudharsan SR

மூன்று வேடங்களில் நடிக்கும் அரிய வாய்ப்பில் விஜய்

 



தனது வழக்கமான ஸ்டைலை மாற்றி, புதிது புதிதாக எதையாவது செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். தனது "இமேஜ்" சரிந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கும் விஜய், ஒரே நேரத்தில் பல படங்களுக்கு தனது நேரத்தினை ஒதிக்கிக் கொடுத்திருக்கிறார்.
காவலன், வேலாயுதம் என இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வரும் விஜய், இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள "3 இடியட்ஸ்" தமிழாக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாயிருகிறார். இவை தவிர இயக்குனர் சீமான், இயக்குனர் சற்குணம் ஆகியோரிடமும் கதை கேட்டுவருகிறார். காவலன் திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில்தான் மூன்று வேடங்களில் நடிக்கும் விஞ்ஜான கதையம்ச படமொன்றிற்காக நடிகர் விஜயினை நாடியிருக்கிறார் இயக்குனர் விஜய். மூன்று வேடங்களில் கலக்கக்கூடிய அரிய சந்தர்ப்பம் தன்னை தேடி வந்ததில் சந்தோஷத்தில் இருக்கிறார் விஜய் 

கதை பிடித்துவிட்டாலும் இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுமாகியுள்ளதால் தனக்கு விடை கிடைத்துவிட்டால் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் முப்பரிணாமம் எடுக்க தயாராகிவிடுவார் விஜய்.

3 comments

Write comments
Sudharsan SR
AUTHOR
23 October 2010 at 10:11 delete

தனது "இமேஜ்" சரிந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கும் விஜய், ஒரே நேரத்தில் பல படங்களுக்கு தனது நேரத்தினை ஒதிக்கிக் கொடுத்திருக்கிறார்.

Reply
avatar