படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து போஸ்ட் புரடெக்*ஷன் வேலைகளும் முடியும் நிலையில் இருகிறது மன்மதன் அம்பு திரைப்படம். இந்தப் படத்துக்கு கதை, திரைகதை, வசனம், பாடல்கள் என்று பட்டையைக் கிளப்பியிருக்கிறார் கலைஞானி கமல். இந்தப்படத்திற்கான டப்பிங் பேசி முடித்து விட்ட கமல் தற்போது 200 கோடியில் தயாராக இருக்கும் ஜிகா பட்ஜெட் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருகிறார் என்ற நம்பகமான தகவல் கமல் அலுவலக வட்டாரத்தில் கிடைக்கிறது.
இந்தப்படத்தை கமலே இயக்குகிறார். இது மர்மயோகியாக அல்லது மருத நாயகமா என்ற தகவல் கசியத நிலையில், இந்தப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சூரியா இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்க இருகிறார்களாம். இதனால் சூரியா கே.வி ஆனந்துக்கு கொடுத்த கால்ஷீட்டை திரும்ப பெற்றுக்கொண்டிருகிறார் என்று கே.வி. ஆனந்த் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள். தீபிகா படுகோன், திரிஷா, ஜெனிலியா டிசோசா ஆகிய மூன்று கதாநாயகிகள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும்
தகவல் கிடைக்கிறது. 200 கோடி எனும் போதே சூடு பறக்கிறது.