சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் களமிறங்கப்போவது “3 இடியட்ஸ்” ரீமேக்கில். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகவிருக்கிறது “3 இடியட்ஸ்”. இதில் தமிழ் பதிப்பில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் இளைய தளபதி விஜய்.
மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் சித்தார்த்தும் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் “3 இடியட்ஸ்”தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு பதிப்பில் பிரின்ஸ் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். வரும் டிசம்பர் 6 முதல் “3 இடியட்ஸ்” படத்தின் தெலுங்கு பதிப்பை முதலில் தொடங்குகிறார் ஷங்கர். தற்போது மகேஷ் பாபுவின் கால்ஷீட் இருப்பதன் காரணமாக “3 இடியட்ஸ்” படத்தை முதலில் தெலுங்கில் தொடங்குகிறார் ஷங்கர்.
விஜய்யின் கால்ஷீட் தற்போது பிஸியாக இருப்பதால், விஜய்யின் தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து, ஜனவரியிலிருந்து தமிழ் பதிப்பை ஆரம்பிக்கவிருக்கிறார் ஷங்கர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு பதிப்பிலும் ஹீரோயினாக நடிக்கவிருப்பவர் இஞ்சி இடுப்பழகி இலியானா. மனோஜ் பரமஹம்ஷா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
1 comments:
Write commentsஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் “3 இடியட்ஸ்”தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ReplyROFL