Tuesday 26 April 2016

Ram

விஜய் 60: படக்குழு விவரம் அறிவிப்பு!

  
  தெறி படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை பரதன் இயக்குகிறார். கில்லி, வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தாக பணியாற்றிய பரதன், விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.

விஜய் 60 என்று தற்போது குறிப்பிடப்படும் இந்தப் படத்தில் விஜய்யின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் 60 படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் விஜய் 60 படத்தின் படக்குழு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், சதீஷ், ஆடுகளம் நரேன், அபர்னா வினோத் போன்ற நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.









    

Source