அஜீத்தின் அசல் படம் நேற்று ரிலீசானது. சென்னையில் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் அஜீத்தின் பிரமாண்ட கட்அவுட்கள் வைத்திருந்தனர்.
சாந்தி தியேட்டரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டார்கள். அஜித் கட்டவுட்டுக்கு 150 அடி உயர மாலை அணிவித்தனர். கையில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டினார்கள்.
அசோக்நகர் பகுதியில் உள்ள காசி தியேட்டரில் ரசிகர்கள் படு அமர்க்களப்படுத்தினர். பால் அபிஷேகம், பீர் அபிஷேகம், கற்பூரம் என்று அமர்க்களப்படுத்தியதால் கூட்ட நெரிசலால் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

ரசிகர்களைக்கூட அவ்வளவாக சந்திப்பதில்லை அஜீத். விழாக்களையும் 99% தவிர்த்துவிடுகிறார் அஜீத். பொதுவாக ரசிகர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறார் அஜீத். அப்படியிருந்தும் இத்தனை தீவிர ரசிகர்கள் அவருக்கு இருப்பது ஆச்சரியம்தான்.
- வடபழனிவாலு
மேலும் அமர்க்களங்கள்:
- வடபழனிவாலு
மேலும் அமர்க்களங்கள்: